தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சமூகநீதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 20, 2024

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சமூகநீதி

சென்னை, மார்ச் 20 இன்று (20-3-2024) சென்னை அறிவால யத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதில் சமூகநீதிப்பற்றி குறிப்பிட்டுள்ளவை வருமாறு:

1. பா.ஜ.க அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, குலத் தொழிலைச் செய்ய ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா திட்டம்’ சமூக நீதி அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும்.
2. தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் உரிய பிரதிநிதித் துவத்தை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
3. நாட்டில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் (அய்அய்டி), மற்றும் இந்திய மேலாண்மை கழகம் (IIM) மற்றும் ஒன்றிய அரசின் இதர உயர்கல்வி நிறுவனங்களில் தற்போது ஆசிரியர் நியமனம் மற்றும் தேர்வு பேனல்களில் இட ஒதுக்கீடு, முறையாகப் பின்பற்றப்படவில்லை. இந்நிறு வனங்களில் மண்டல் கமிஷன் அடிப்படையிலான இடஒதுக் கீட்டு முறை கண்டிப்பாகப் பின்பற்றப்படும்.
4. கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் வசித்து வரும் வால்மீகி இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
5. குன்னுவார் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
6. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், வீடற்ற மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் உறுதியான வாழ்வாதாரத் உரிமைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
7. உயர்கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் பட்டியலின, மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடுகள் முறையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தேசிய மற்றும் மாநிலங்களின் அளவில் பன்முகத் தன்மை, சமத்துவம் மற்றும் அனைவருக்குமான ஆணையம் (Commission for Diversity, Equity and Inclusion) அமைக் கப்படும்.
8. இந்த ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும், உத்தரவுகளையும் பின்பற்றாத அல்லது குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் நிறைவேற்றத் தவறிய உயர்கல்வி நிறுவனங் களுக்கான நிதி குறைப்பு அல்லது தரவரிசை மீதான நடவடிக்கை போன்றவை மேற்கொள்ளப்படும்.
9. 2019 ஆம் ஆண்டு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தனியார் துறை வேலைகளில், குறைந்த ஊதியம் பெறும் வேலைகளுடன் ஒப்பிடுகையில், அதிக ஊதியம் பெறும் வேலைகளில் பட்டியலினத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் குறைவாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இது, பணியிடங்களில் சமூக நீதியை உறுதி செய்ய, தனியார் துறைக்கும் இடஒதுக்கீட்டை விரிவுபடுத் துவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆகவே, தனியார் துறையிலும், இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த உறுதி யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
10. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் நலன் கருதி 50% இடஒதுக்கீட்டைதிமுக உறுதி செய்யும். Creamy Layer அறவே ரத்து செய்யப்படும். பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யப்படும்.
11. மாநில அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்ற ஜாதிகளை ஒன்றிய இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வழிவகை செய்யப்படும்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு:
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு இதுவரை மேற்கொண்டு வந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு எடுக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இனிவரும் காலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்போடு ஜாதி வாரிக் கணக்கெடுப்பு, வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பு என அனைத்துக் கணக்கெடுப்புகளும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே நேரத்தில் ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment