புதுடில்லி, மார்ச் 7 காங்கிரஸ் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ப.சிதம் பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு 3 நாட்களுக்கு முன்பு டில்லியில் இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் பல்வேறு வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலை யில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு டில்லியில் மீண்டும் கூடி கட்சியின் தேர்தல் அறிக் கைக்கு இறுதி வடிவம் தந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வார இறுதியில் காங்கிரஸ் தேர் தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அந்த அறிக்கையில் பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், பிற்படுத் தப்பட்டவர்கள், சிறு-குறு தொழில் செய்பவர்கள், மாணவர்கள் ஆகியோ ருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருவது பற்றியும், ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்துவது பற்றி யும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலையில்லாத இளை ஞர்களுக்கு வங்கியில் நேரடியாக உதவித்தொகை, மானிய விலையில் சமையல் எரிவாயு உருளை, குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் கிருக லட்சுமித் திட்டம் என பல வாக்குறுதிகளை காங்கிரஸ் அளிக்கவுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு உடனடியாக அரசு வேலை தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் ஓய்வூதியதாரர் களுக்கு பழைய திட்டம் கொண்டு வரப்படும் என் றும் காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்க வாய்ப்பு இருக்கிறது என்று காங் கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிருக லட்சுமி திட்டம் கருநாடகாவில் வெற்றிகரமாக செயல்படுத் தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்தும் தேர்தல் அறிக் கையில் காங்கிரஸ் வெளி யிடும் என்று தெரிகிறது.
தேர்தல் அறிக்கை குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறும் போது, “அனைவரிடமிருந் தும் பெறப்பட்ட ஆலோ சனைகளை ஒருங்கிணைத்து, இளைஞர்களின் ஆட் சேர்ப்பு செயல் முறையை வெளிப்படையானதாக மாற்றுவதற்கான உறுதி யான திட்டத்தை காங்கிரஸ் தயாரித்து வருகிறது, விரைவில் நாங்கள் எங்கள் தேர்தல் வாக்குறுதியை உங்கள் முன்வைப்போம்’’ என்றார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அக்னிபாத் திட்டத்தை கைவிடுவது தொடர்பான அறிவிப்பும் தேர்தல் அறிக் கையில் இடம்பெறவுள்ள தாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment