மகாராட்டிராவில் பிஜேபிக்கு சிக்கல் “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவாக களமிறங்கும் அஜித் பவாரின் சகோதரர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 20, 2024

மகாராட்டிராவில் பிஜேபிக்கு சிக்கல் “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவாக களமிறங்கும் அஜித் பவாரின் சகோதரர்

மும்பை,மார்ச் 20– ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை இரண் டாக உடைத்து பாஜக ஆதரவுடன் மகாராட்டிரா முதலமைச்சரானது போல், சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து துணை முதலமைச்சராக உள்ளார். பாஜக ஆதரவுடன் 41 சட்டமன்ற உறுப்பினர்களை தனது பக்கம் வளைத்தது போல, மோடி அரசின் ஆதரவுடன் தேர்தல் ஆணையத்தி டம் தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் பெயர் மற்றும் சின்னத்தை அஜித் பவார் தரப்பு வாங்கியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் (41 பேர்) மட் டுமே அஜித் பவாருடன் உள்ள நிலையில், மற்ற முக்கிய தலைவர் கள் மற்றும் தொண்டர்கள், மக்கள் ஆதரவு என அனைத்தும் சரத் பவாரிடமே உள்ளனர்.
இதனால் சரத்பவாரின் ஒளிப் படத்தை வைத்து மக்களவை தேர்தலை சமாளிக்க அஜித் பவார் திட்டம் வகுத்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் சரத் பவார் படத்தை பயன்படுத்தக் கூடாது எனக் கூறியது.
இதனால் அஜித் பவார் கடந்த ஒரு வாரமாக வெளியே தலைகாட் டாமல் இருந்த நிலையில், அஜித் பவாரின் சகோதரர் சிறீனிவாஸ் பவார் சரத் பவாருக்கும், “இந் தியா” கூட்டணிக்கு ஆதரவாக கள மிறங்கி பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

மகாராட்டிரா மாநிலம் புனே வில் நடைபெற்ற தேர்தல் பிரச் சாரப் பொதுக்கூட்டத்தில் சிறீனி வாஸ் பவார் பொது மக்கள் முன் னிலையில் பேசுகை யில்,”நான் என் சகோதரனுக்கு எதிரானவன் என்று நீங்கள் ஆச்ச ரியப்படலாம்.
ஆனால் சரத் பவாரை அஜித் பவார் கைவிட்டபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன். இது நல்லதல்ல. நிலம் தங்கள் பெயரில் உள்ளது என்பதற்காக பெற் றோரை வீட்டை விட்டு வெளியேற் றும் நிகழ்வை அஜித் பவார் செய்துள்ளார்.
ஒவ்வொரு உறவுக்கும் காலா வதி தேதி உண்டு என்ற நிலையில், பாஜகவின் சதியால் தேசியவாத காங்கிரஸ் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது.
வரவிருக்கும் தேர்தலில் சரத் பவாருக்கு ஆதரவாக களமிறங்கு வேன்” எனக் கூறினார்.

மனைவிக்கு பிரச்சாரம் செய்யக் கூட ஆளில்லை
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே வரவிருக்கும் மக்களவை தேர்தலில் வழக்கம்போல பாரமதி தொகுதி யில் களமிறங்குகிறார்.
சுப்ரியா சுலே நாடாளுமன்றத் தில் பாஜகவிற்கு எதிராக வலுவான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரதமர் மோடியை திக்குமுக்காட வைப்பவர் என்ப தால், மக்களவை தேர்தலில் அஜித் பவார் தரப்புக்கு 4 சீட்களை கொடுத்து, பாரமதி தொகுதியில் சுப்ரியா சுலேவை வீழ்த்த அஜித் பவார் மனைவி சுனித்ரா பவார் நிறுத்தப்பட்டுள் ளார்.
இத்தகைய சூழலில் பார மதியில் சுப்ரியா சுலேவுக்கு ஆத ரவாக அஜித் பவாரின் சகோதரர் சிறீனிவாஸ் பவார் களமிறங்கி பிரச்சாரம் செய்ய உள்ளதால், தனது குடும்ப உறுப்பினர்களே தன்னை புறக்கணித்துள்ளதால் அஜித் பவார் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

No comments:

Post a Comment