பிஜேபியின் ஒழுக்கம் இதுதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 17, 2024

பிஜேபியின் ஒழுக்கம் இதுதான்!

featured image

17 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை
போக்சோவில் கைதாகும் எடியூரப்பா?

பெங்களூர், மார்ச் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கருநாடகா பாஜக மூத்த தலைவரும், மேனாள் முதலமைச்சருமான எடியூரப்பா மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அவர் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் பரவும் நிலையில் கருநாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நிகழ்வு குறித்து முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.
கருநாடகாவில் பாஜகவின் மூத்த தலைவராக இருப்பவர் எடியூரப்பா. வயது 81. இவர் 4 முறை கருநாடகாவின் முதலமைச்சராக இருந்துள்ளார். கடந்த 2007இல் 7 நாட்கள், அதன்பிறகு 2008 முதல் 2011 வரையும், அதன்பிறகு 2018 இல் 3 நாட்களும், அதைத் தொடர்ந்து 2019 ஜுலை மாதம் 2021 ஜுலை மாதம் வரையும் எடியூரப்பா முதலமைச்சராக இருந்துள்ளார்.

இவரது மகன் விஜயேந்திரா தான் தற்போது கருநாடகா மாநில பாஜக தலைவராக உள்ளார். இந்நிலையில் தான் எடியூரப்பா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரிடம் உதவி கேட்டு வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது பெங்களூள் சதாசிவநகரில் எடியூரப்பாவின் இல்லம் அமைந் துள்ளது. கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி பெண் ஒருவர் தனது மகளுடன் உதவி கேட்க எடியூரப்பாவின் இல்லத்துக்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில் சிறு மியை அறைக்குள் அழைத்து சென்று எடியூரப்பா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று சதாசிவ நகர் காவல்துறையில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை 17 வயது சிறுமியின் தாயாரே கொடுத்தார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து எடியூரப்பா மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில் சதாசிவநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

எடியூரப்பா மீதான இந்த புகார் கருநாடக அரசியலில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எடியூரப்பா தான் கருநாடகாவில் பாஜகவின் முகமாக உள்ளார். அவர் பிரச்சாரத்துக்கு தயாராகி வந்த நிலை யில் இந்த வழக்கு என்பது அவருக்கு பிரச்சினையாக மாறி உள்ளது.

மேலும் விரைவில் எடியூரப்பா கைது செய்யப்பட உள்ளதாக தக வல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி கருநாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடம் கேட்கப்பட்டது. அப்போது, மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் சதாசிவநகர் போலீசில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏனென்றால் இது மிகவும் சென்சிட் டிவான விடயம். அதோடு மேனாள் முதலமைச்சர் சம்பந்தப்பபட்டுள்ளார். இந்த விவகாரத்தை பொறுத்தவரை விசாரணை அறிக்கையை பொறுத்துத் தான் எதையும் கூற முடியும். மேலும் இதில் அரசியல் கோணம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. புகார் தந்த பெண் யார்? என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்” என்றார்.

No comments:

Post a Comment