11.3.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ‘வேண்டாம் மோடி’ என்ற முழக்கமே இந்தியா முழு வதும் எதிரொலித்துக் கொண்டுள்ளது. நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது ஒன்றிய அரசில் நடக்கும் – மாநி லங்களை மதிக்கும் ஒன்றிய அரசை அமைக்க வேண்டு மானால் நாம் இங்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
* தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென பதவி விலகியதால் மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மோடியின் வாக்குறுதிக்கு ஒரு மரியாதையும் கிடையாது. இப்போது சமையல் எரிவாயு விலையை ரூ.100 குறைப்பார். தேர்தலுக்கு பின் ரூ.1000 விலை உயர்த்துவார் என மம்தா தாக்கு.
* கருநாடகா பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான அனந்தகுமார் ஹெக்டே, ‘‘ஹிந்து மதத்திற்கான முன்னுரிமை யையும் முக்கியத்துவத்தையும் மீண்டும் பெறும் வகையில் அரசமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், அதை செய்ய ஏதுவாக இந்த தேர்தலில் 400க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜவை மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் பேச்சு.
* “தேர்தலுக்கு முன் மோடி அறிவிக்கும் நூற்றுக் கணக்கான திட்டங்கள் தனது பொறுப்பில் இருந்து தப்பிக்கும் நாடகம்” என்கிறார் அரசியல் ஆய்வாளர் பர்சா வெங்கடேஷ்வர ராவ் ஜூனியர்.
தி இந்து:
* 2 புதிய தேர்தல் ஆணையர்களை வரும் 15ஆம் தேதி நியமிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதில் மேலும் தாமதம் ஏற்படும்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் நரேந்திர மோடி அரசு அவர்களுடைய மனுசாஸ்திர நோக்கங்களை மக்கள் மீது திணித்து தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர்கள், சிறுபான்மையினரின் உரிமைகளை பறித்து விடுவார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
* காங்கிரஸ் நாடாளுமன்ற உப்பினர் ராகுல் காந்தி – ‘‘பாபாசாகிப் அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை அழிப் பதே மோடி, பாஜகவின் முக்கிய இலட்சியம். அவர்களின் இந்த சதித் திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் அனுமதிக் காது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வர்கள், சிறுபான்மையினர் தங்கள் உரிமைக்காக போராட வேண்டும். அவர்களின் போராட்டத்துக்கு “இந்தியா” துணை நிற்கும் என பதிவிட்டுள்ளார்.
* அரியானா மாநிலம் ஹிசார் மக்களவை தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜேந்திர சிங் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். அவர் தனது டிவிட்டரில், ‘‘அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக சில காலமாக அமைதியின்றி இருந்தேன். விவசாயிகள் பிரச் சினை, அக்னிபாதை திட்டம், மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு போன்ற விவகாரங்களில் பாஜக வுடன் என்னால் உடன்பட முடியவில்லை. இதனால் காங்கிரசில் இணைந்துள்ளேன்’’ என பதிவிட்டுள்ளார்.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment