திருப்பரங்குன்றம், மார்ச் 6 மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கான பூமிபூஜை நேற்று நடத்தது. இதில் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை
மதுரை திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 199.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,977.80 கோடியில் உலகத்தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை மய்யமாக எய்ம்ஸ் மருத் துவமனை அமைக்க திட்டமிடப்பட் டது. தென்மாவட்ட மக்களின் மிகுந்த ஆர்வத்தோடு அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனைகட்டுமான பணிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
முதல்கட்டமாக வாகன போக் குவரத்து வசதிக்காக ஒன்றிய சாலை திட்டத்தின் கீழ் ரூ.21.20கோடியில் கூத்தியார் குண்டு முக்கிய சாலை சந்திப்பில் இருந்து கரடிக்கல் வரை 250 மீட்டர் தூரம் 20 அடி சாலையை 60 அடி சாலையாக விரிவுப்படுத்தப் பட்டது. அதன்பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள 199.27 ஏக்கர் நிலத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.இந்த நிலையில் தோப்பூருக்கு அருகில் உள்ள ஆஸ்டின்பட்டி அரசு மருத் துவமனையின் பழைய கட்டடம் ஒன்றிய அரசின் பொதுப்பணி துறையின் கீழ் ரூ.2 கோடியே 16 லட்சத்தில்
புனரமைக்கப்பட்டது. அங்கு எயம்ஸ் மருத்துவமனை தற்காலிக நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
அதன்பேரில் பிரபல கட்டுமான தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன. இதற்கிடையே கட்டுமான பணிக்காக வாஸ்து நாள் நேற்று என்று கூறி அங்கு பூமி பூஜை நடந்ததாம். இந்த பூஜையில் மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்த்ராவ் கலந்துகொண்டார்.
முதல்கட்டமாக 18 மாதத்திற்குள் கல்லூரி வளாகம், மாணவர் விடுதி, வெளிநோயாளிகள் பிரிவு ஆகிய வற்றை கட்டி முடிக்கவும், அதற்காக திட்ட அனுமதி, தீ பாதுகாப்பு ஒப்புதல், சுற்றுச் சூழல் அனுமதி பெற்ற பிறகு கட்டுமான பணிகள் தொடங்கும். அதேபோல தற்போது ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி வகுப்புகள் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் மதுரைக்கு மாற்றப் படலாம் என்றும் எய்ம்ஸ் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பூமி பூஜை நடந்தபோது, தேசிய கொடி யுடன் கூடிய எய்ம்ஸ் கூட்டமைப்பு சார்ந்த பேனர் கட்டப்பட்டு இருந் தது. பூஜை முடிந்த
சில மணி நேரத் தில் அந்த பேனர் அங்கிருந்து அகற் றப்பட்டது.
தென் தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கும் எய்ம்ஸ் மருத்துவ மனையின் பூமி பூஜையில் அதன் நிர்வாக இயக்குநர் தவிர உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமு கர்கள் என யாருமே பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment