சண்டிகார், மார்ச் 2- பஞ்சாப் _- அரியானா எல்லையில் காவல்துறையினருடன் நடந்த மோதலில் விவ சாயி உயிரிழந்தது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப் பட்டு உள்ளது.
டில்லி நோக்கி பேரணி
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவரவேண்டும், வேளாண் கடன் தள்ளுபடி உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த மாதம் 13ஆம் தேதி டில்லி நோக்கிய பேரணி தொடங்கினர்.
பஞ்சாப் விவசாயிகளின் இந்த பேரணியை அரியானா எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத் தினர். இதனால் ஷாம்பு, கானாரி போன்ற இடங்களில் விவசாயிகள் முகாமிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதற்கிடையே விவசாய அமைப் புகளின் பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பலசுற்று பேச்சுவார்த் தையும் பயன் இல்லாத தால் கடந்த 21ஆம் தேதி மீண்டும் விவசாயிகள் தங்கள் பேரணியை தொடர முயன்றனர்.
விவசாயி உயிரிழப்பு
கானாரி எல்லையில் முகாமிட்டி ருத்த விவசாயிகள். டில்லி நோக்கி செல்வதற்காக காவல்துறையினரின் தடுப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது. காவல்துறையினருக் கும், விவசாயிகளுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது.
இதில் சுப்கரன் சிங் (வயது 21) என்ற விவசாயி உயிரிழந்தார்.மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த மோதலில் 12 காவல்துறையினரும் காயமடைந்தனர்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
உயிரிழந்த விவசாயி பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டாவை சேர்ந் தவர் ஆவர். அவரது குடும்பத்துக்கு ரூ.1கோடி இழப்பீடு மற்றும் அவரது சகோதரிக்கு அரசு வேலை வழங் கப்படும் என மாநில அரசு அறிவித்தது.
பஞ்சாப் அரசு பேச்சுவார்த்தை
இதற்கிடையே சுப்கரன் சிங் மறைவு தொடர்பாக காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தை தீவி ரப்படுத்தினர். அதுவரை அவரது உடலை பரிசோதனை செய்ய அனு மதிக்கமாட்டோம் என்றும் அறிவித்தனர். இதனால் சுப்ரகன் சிங் கின் உடல் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந் தது. இது தொடர்பாக விவசாயிகளுடன் பஞ்சாப் அரசு பேச்சு வார்த்தை நடத்தியும் வந்தது.
உடற்கூராய்விற்கு அனுமதி
நிகழ்வு நடந்து ஒரு வாரம் கடந் துள்ள நிலையில், விவசாயி சுப்கரன் சிங் உயிரிழப்பு தொடர்பாக காவல் துறையினர் 29.2.2024 அன்று கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
பாட்டியாலாவில் உள்ள பத்ரன் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை), 114 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எனினும் அடையாளம் தெரி யாத நபர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுப்கரன் சிங்கின் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து அவரது உடலை உடற் கூராய்வு செய்ய விவசாயிகள் அனுமதித்தனர். அதன்படி அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இதையொட்டி ராஜிந்திரா மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Saturday, March 2, 2024
வேளாண் போராட்டம் விவசாயி உயிரிழந்த பிரச்சினையில் கொலை வழக்குப் பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment