தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம்
காஞ்சிபுரம், மார்ச் 21- 16.3.2024 சனிக் கிழமை மாலை 6.00 மணியளவில், சின்ன காஞ்சிபுரம் டோல் கேட்பட்டாளத் தெருவில், அன்னை மணியம்மையாரின் நினைவு நாளில் அவர் தொண்டுக்கு வீரவணக்கமும், தமிழ் நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தெருமுனைக் கூட்டமும் கழக சார்பில் நடைபெற்றது .
காஞ்சி மாநகர கழகத் தலைவர் ச.வேலாயுதம் கூட்டத் திற்கு தலைமை வகித்தார்.
எழுச்சிப் பாடகர் உலக ஒளி பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினார்.
காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றி அனைவரையும் வரவேற்று கூட்டத்தை ஒருங் கிணைத்தார்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ந.சிதம்பரநாதன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுற்றுச்சூழல் அணியின் சி.எல்.கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை கழக அமைப்பா ளர் பு.எல்லப்பன் தொடக்க உரையாற்றினார்.
தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் காஞ்சி அமுதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட் டச் செயலாளர் மதி ஆதவன், கழக மாவட்ட இணை செயலாளர் சீத்தாவரம் ஆ. மோகன், காஞ்சி மாநகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பெ. சின்ன தம்பி, மாவட்ட திராவிட மகளிர் பாசறை அ.ரேவதி, பகுத்தறிவாளர் கழகத்தின் பல்லவர் மேடு பகுதி தோழர் சேகர், அறிவு வளர்ச்சி மன்ற நிறுவனர் நாத்திகம் நாகராசன் ஆகியோர் பாசிச பாஜக ஆட்சியால் ஏற்பட்ட சீர்கேடுகள் குறித்தும் திராவிட மாடல் ஆட்சியின் மாட்சிகள் குறித்தும் உரையாற்றினார்.
கழகச் சொற்பொழிவாளர் முனைவர் பா. கதிரவன் சிறப்புரையாற்றினார்.
அவர்தம் உரையில்,
தமிழ் நாட்டில் பெரியார், அண்ணா, மணியம்மையார், கலைஞர் ஆகியோரின் தொண்டு குறித்தும், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் எல்லப்பனார், ஆசிரி யர் வெங்கடேசன் ஆகியோரின் இயக்கத் தொண்டு குறித்தும், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, தொழில் துறையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் பாஜகவின் மோடி அரசால் வஞ்சிக்கப்படுவதையும், இயற் கைப் பேரிடரால் பாதிக்கப் பட்ட தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நிதி வழங்காதது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காதது முதலியவற்றைக் கண்டித்தும், பாசிச பாஜக ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு இழைக்கப்படும் அநீதி கள் குறித்தும் குறிப்பிட்டு, வரும் நாடாளுமன்றத் தேர்த லில் பாஜக ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண் டும் என்றும் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்க ளின் வழிகாட்டலில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் உள்ள திராவிட மாடல் கூட் டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அன்னை மணியம்மையா ரின் படத்திற்கு மாலை அணி வித்து அனைத்துக் கட்சியின ரும் கொள்கை முழக்கமிட்டு வீரவணக்கம் செலுத்தினர்.
கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளர் கி.இளையவேள், இராணிப் பேட்டை மாவட்ட கழகத் தலைவர் சு. லோகநாதன், காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா. இளம் பரிதி, வாலாஜாபாத் ஒன்றிய கழக அமைப்பாளர் எஸ். செல் வம், பெரியவர் அண்ணாமலை, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பன்னீர்செல்வம், அரசு ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர் வெ. லெனின், பெரியார் பிஞ்சு கவினி, மருத்துவக் கல்லூரி மாணவி லாவண்யா, தோழர் தீ. கோபாலகிருஷ்ணன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட இளைஞரணித் தலைவர் வீ. கோவிந்தராஜி அனைவருக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment