சென்னை, மார்ச் 7 சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மற்றும் வழக்காடும் மொழியாக்கக்கோரி வழக்குரை ஞர் பகவத்சிங் தலைமையில் வழக்குரை ஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் என 24 பேர் கடந்த பிப்.28ஆ-ம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளை யாட்டு மைதானம் அருகே தொடர் பட் டினிப் போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.
வழக்குரைஞர்களின் இந்தப் போராட்டம் தொடர்பாக வழக்குரைஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவரும், பாமக வழக் குரைஞர் அணி செய்தி தொடர்பாளருமான கே.பாலு உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார்.
அப்போது வழக்குரைஞர் கே.பாலு, தமிழை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதற்காக தொடர் பட்டினிப் போராட்டம் நடந்து வருகிறது. அதில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர் என்றார்.
அதையடுத்து தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற வழக்குரை ஞர்களின் பட்டினிப் போராட்டம் மற்றும் கோரிக்கையை மனிதாபிமான அடிப்படை யில் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும், இதில் சட்ட ரீதியாக தங்களால் தலையிட முடியாது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுதான் தகுந்த முடிவை எடுக்க முடியும், என கருத்து தெரிவித்தனர்.
மேலும் இந்த விவகாரத்தை தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி மாநில அரசு ப்ளீடர் எட்வின் பிரபாகரிடமும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
No comments:
Post a Comment