புதுடில்லி, மார்ச் 23- ‘மோடி பரி வார்’, ‘மோடி உத்தரவாதம்’ உள் ளிட்ட ஒன்றிய அரசு விளம் பரங்கள் தேர்தல் நடத்தை விதி களை மீறுவதாக உள்ளது என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
2024 மக்களவை தேர்தல் தேதி கள் அறிவிக்கப்பட்ட பிறகும் ஒன் றிய அரசு தேர்தல் நடத்தை விதி களை மீறுவதாக காங்கிரஸ் தலை வர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், சுப்ரியா ஷ்ரினேட் ஆகி யோர் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகார் கடிதங்களில் கூறியிருப்பதாவது:
பத்தாண்டுகளுக்கு முன்பு காங் கிரஸ் மீது தொடுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர் பான பொய் வழக்கு சட்ட ரீதியாக முறியடிக்கப்பட்ட பிறகும் பாஜக இதுகுறித்து இன்று வரை பொய் பரப்புரை விளம்பரங்கள் செய்து வருகிறது.
இத்தகைய விளம்பரங்கள் உட னடியாக நீக்கப்பட்டு அதை உரு வாக்கியவர்கள் மற்றும் பதிப் பாளர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும்.
அடுத்து, ‘மோடி பரிவார்’ விளம்பரம் மூலம் அரசின் நிதி ஆதாரமும் அதிகாரமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத் தகைய விளம்பரங்களை பரப்ப ஒன்றியதகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நிர்ப்பந்திக்கப்படு வதை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
இதுதவிர பிரதமரே நேரடியாக மக்களிடம் பிரச்சாரம் செய்வது போல பிரதமர் அலுவலக அதிகா ரப்பூர்வ லெட்டர்ஹெட்டில் அச் சடிக் கப்பட்ட வாசகங்களுடன் சுற்றறிக்கை ஒன்று சமூக ஊட கங்களில் உலா வருகிறது.
இது கட்டாயம் தடை செய்யப் பட வேண்டும். இதுபோன்று சுற்ற றிக்கையை பகிர்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அடுத்ததாக, டில்லி மெட்ரோ ரயில்களிலிருந்து ‘மோடி உத்தர வாதம்’ விளம்பரப் பலகைகள் இன்னும் நீக்கப்படவில்லை. அரசு நிறுவனங்கள், அரசு அலுவல கங்கள், பெட்ரோல் பங்குகள் பலவற்றில் இன்னமும் பிரதமரின் புகைப்படங்களை அப்புறப்படுத் தாமல் இருப்பது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதி மீறலாகும்.
இவை எல்லாவற்றையும்விட பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஆபாசமாக சித் தரிக்கப்பட்டிருக்கிறார்.
அய்பிசிசட்டப்பிரிவு 1860இ-ன் கீழ் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951இ-ன் கீழ் இத்தகைய முறைகேடான கருத்துகளை உரு வாக்கியவர்கள் மீதும் அதனை வெளியிட்ட பதிப்பாளர்கள் மீதும் கடும்நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment