ஓசூர், மார்ச் 4- சிதறு தேங்காயான பா.ஜ.க. கூட்டணி தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட டெபா சிட் வாங்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறி னார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தேர்தல் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்க கூட்டம் ஓசூரில் 2.3.2024 அன்று நடை பெற்றது. இதில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
பா.ஜ.க. தலைவர்கள் தன்னடக்கம் இல்லாதவர்கள். அண்ணாமலை உள் பட வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். தைரியம் இருந் தால் அகில இந்திய தலைவர்கள் யாராவது தமிழ்நாட்டில் போட்டி யிட்டு பார்க்கட்டும்.
ஒருவரும் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள். தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தவர்கள் தான் பாஜகவினர்.
தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெள் ளச் சேதம் ஏற்பட்ட போது வந்து பார்க்காதவர்கள், 37 ஆயிரம் கோடி வெள்ள சேதமாக தமிழ்நாடு கேட்ட போதும் ஒரு சல்லி காசு கூட தராதவர் கள் பாஜக ஒன்றிய அரசை சேர்ந்த வர்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி சிதறு தேங்காய் போல சிதறுண்டு போய் உள் ளது பா.ஜ.க.. யாராவது கிடைப்பார் களா என்று ஜன்னல் கதவு எல்லா வற்றையும் திறந்து வைத்துக் கொண்டு ஆள் பிடிப்பதற்காக காத்துக் கொண் டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. நிச்சய மாக காலூன்ற முடியாது. இந்தியா கூட்டணி தி.மு.க. தலைமையில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். மோடி அரசு 10 ஆண்டுகளில் எதுவுமே செய்ய வில்லை.
தேர்தல் வாக்குறுதி படி 15 லட்சம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் போட வில்லை, விவசாயிகள் விளை பொரு ளுக்கு இரட்டிப்பு விலை,வருமானம் இருமடங்கு உயர்வதற்கான உத்தர வாதம் அளிப்போம் என்றெல்லாம் பொய் கூறி னார்கள். ஏற்கனவே டில்லி யில் போராடிய விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததால் டில்லியில் தற் போது ஒன்றிய அரசை எதிர்த்து மீண் டும் விவசாயிகள் பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மேடை நாகரீகம் இல்லாதவர் மோடி
“தொழிற்சங்க உரிமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டு விட்டது. எதிர்க்கும் கட்சிகளை ஈடி, வருமான வரித் துறை மூலம் மிரட்டி பணிய வைக்கும் இழி வான வேளையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமருக்கும் சிறிதும் அரசியல், மேடை நாகரிகம் கூட தெரிவதில்லை. தமிழ்நாட்டில் நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் பெயரை கூட கூற மறுத்து மோடி நேரடி யாக பா.ஜ.க. அரசியலை பேசுகிறார். கருநாடகா விலும் இந்தியா கூட்டணியே மகத்தான வெற்றி பெறும் என செய்திகள் வந் துள்ளன.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
No comments:
Post a Comment