சென்னை, மார்ச் 10– இந்திய அரசின் தேசிய திட்டமான உன்னத் பாரத் அபியான் உடன் அய்.வி.டி. தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தியாளரான லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இணைந்து, அய்.அய்.டி. டில்லியின் எஃப்.அய்.டி.டி. அறக் கட்டளையின் முன்முயற்சியில் கிராமப்புற இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு அணுகு தலைப் புரட்சிகரமாக மாற்றும் நோக்கத்துடன் புதிய இ ஸ்மார்ட் கிளினிக் திட்டம் தொடங்கப் பட்டது.
டில்லி அய்.அய்.டி.யில் லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் இடையே பிப்ரவரி 22.2.2024 அன்று கையெழுத்திடப்பட்ட பிரத்யேக புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் இந்த முயற்சி உருவானது.
இதுகுறித்து லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மானவ் டெலி கூறுகையில், “உன்னத் பாரத் அபியான் உடனான எங்களின் கூட்டு முயற்சிகளின் உச்சநிலையான இ ஸ்மார்ட் கிளினிக் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த முயற்சி சுகாதாரப் பாதுகாப்பில் புதுமை மற்றும் எளிதான அணுகுதல், முன்னெப்போதும் இல்லாத கட்டணத்தில் இந்தியா முழுவதும் அதிநவீன நோயறிதல்கள் மற்றும் நிபுணர் மருத்துவ ஆலோசனைகள் மூலம் தனிநபர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் எங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
அனைத்து மக்களுக்கும் உள்ளடங்கிய மற்றும் சமமான சுகாதாரப் பாதுகாப்பு பற்றிய எங்கள் பார்வையை நனவாக்குவதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்” என்று தெரி வித்துள்ளார்.
Sunday, March 10, 2024
நோயறிதல்கள் மருத்துவ ஆலோசனை மய்யங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment