ஜாதிவாரி கணக்கெடுப்பு பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 8, 2024

ஜாதிவாரி கணக்கெடுப்பு பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் கேள்வி

featured image

புதுடெல்லி, மார்ச்.8– ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பாரதிய ஜனதா நிலைப்பாடு என்ன என்று காங்கிரஸ் கேள்வி விடுத்துள்ளது.
4 கேள்விகள்
காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக் கத்தில் ஒரு பதிவு வெளியிட் டுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:-
பிரதமர் மோடியிடம் கேட்க நாட்டு மக்கள் 4 கேள்விகள் வைத்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை நடத்த வேண்டிய வழக்கமான மக்கள்தொகை கணக் கெடுப்பை அவரது அரசு ஏன் நடத்தவில்லை?
2021ஆம் ஆண்டிலேயே அந்த கணக்கெடுப்பை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் இப்போது வரை நடத் தப்படவில்லை. அதை நடத்தி னால், இதர தரவுகளுடன் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மொழிவழி. மதவழி சிறுபான்மையினரின் மொத்த எண்ணிக்கை குறித்த விவரங்களும் தெரியும்.
வெளியிடாதது ஏன்?
மேலும், 2011ஆம் ஆண்டு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, 25 கோடி குடும்பங்களிடம் சேகரிக்கப்பட்ட ஜாதிவாரி விவரங்களை மோடி அரசு வெளியிடாதது ஏன்?.
பீகாரில், ‘இந்தியா’ கூட் டணி அரசு இருந்தபோது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப் பட்டன. தற்போதுள்ள தேசிய ஜன நாயக கூட்டணி அரசு, அந்த விவ ரங்கள் அடிப்படையில் சமூக நீதியை முன்னெடுக்க என்ன செய்யப் போகிறது?
மோடி பேச வேண்டும் நாடு தழுவிய விரிவான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது.
எங்கள் கட்சி ஆளும் மாநி லங்கள். அதற்கான நடவடிக்கை களை எடுத்து வருகின்றன.
ஜாதிவாரி கணக்கெடுப்பு விவ காரத்தில் பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு என்ன? பிரதமர் மோடி அது பற்றி பேச வேண்டும். -இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment