சென்னை,மார்ச் 21- மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முதல் கட்டத்திலேயே நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில், மாநிலத்தில் ஆளும் திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்து விட் டது.
இந்த சூழலில், பல் வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் திமுக, அதிமுக, பாஜக கட்சியு டன் மக்கள வைத் தேர் தலில் ஆதரவளித்து இணைந்து பணியாற்றுவதற்கான ஒப்பந்தம் மற்றும் கடிதத்தை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் அண்ணா அறிவாலயத் தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஆதரவு அளித்தனர்.
குறிப்பாக, மனிதநேய மக்கள் கட்சியின் தலை வர் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் சட்ட மன்ற உறுப் பினர் அப்துல் சமது ஆகி யோர் சந்தித்து ஆதரவளித்தனர்.
தொடர்ந்து ஆதித் தமிழர் பேரவை நிறுவ னர் அதியமான் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலா ளர்கள் கட்சித் தலைவர் பொன். குமார் மற்றும் நிர்வாகிகள், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள், மனி தநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன் சாரி மற்றும் நிர்வாகிகள், மக்கள் விடுதலைக்கட்சி தலைவர் முருகவேல் ராஜன், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட் டோர் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment