மருத்துவர் சாரதா, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி பங்கேற்பு
திருநெல்வேலி, மார்ச் 14- அய்ன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மற்றும் அய்ன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு மகளிர் நாள் கொண் டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முக்கியமான நிகழ்வாக மருத்துவர் சாரதா மற்றும் திராவிடக் கழகத்தின் துணைப் பொதுச் செயலா ளர் மதிவதனி ஆகியோரின் உரைகள் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை வெகுவாகச் சென்றடைந்தது என்றே சொல்ல வேண்டும். மேலும், கலை நிகழ்ச்சிகள் மற்றும் தனித்திறன் நிகழ்ச் சிகள் என அன்றைய நாள் முழுவதும் கல்லூரியின் மாணவிகளுக்காகவே சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சாரதா மாணவிகளுக்கு புற்றுநோய் மற்றும் மாதவிடாய் போன்றவற்றின் அடிப்படைப் புரிதல்களைப் பற்றி எடுத்துரைத்து மாணவிகளுடன் கேள்வி – பதில் எனக் கலந்து ஆலோசித்தார். ஆரம்பத்தில் இந்த விடயங்களுக்கு சற்றே தயங்கிய மாண விகள், பின்பு இலகுவான மனநிலைக்கு வந்தனர். பல மாணவிகள் கேள்விகளைக் கேட்டு, தாங்கள் மட்டும் தெளிவ டைந்தது மட்டுமல்லாமல், பலரது புரிதலுக்கு துணையாக இருந்தனர்.
திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதி வதனி பேசுகையில், மாணவர்களோடு மாணவராகக் கலந்து, சில மாணவிகளை மேடையில் ஏற்றி கேள்விகளைக் கேட்டு, சில சமயம் அவரே மேடையில் இருந்து கீழே இறங்கி, அவர்களுடன் உரையாடி ஆழமான பல கருத்துகளை எடுத்துரைத்தார் சகோதரி மதிவதனி. மாணவிகளுக்குப் பிடித்தமான முறை யில் எளிமையாக தந்தை பெரியாரின் கருத்துகளை எடுத்துரைத்தது அவர் களின் பேச்சின் சிறப்பம்சமாகும். குறிப் பாக, பெண் உரிமை, கல்வி உரிமை, பொருளாதார உரிமை மற்றும் சுயமரியாதை சிந்தனை போன்றவற்றை மாணவிகளின் மனதில் விதைத்தார்.
மகளிர் நாள் கொண்டாட்டத்தின் நிகழ்வாக அய்ன்ஸ்டீன் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் சுமார் 300 மாணவிகளுக்கு பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூல் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக வழங் கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பாக அமைந்தது.
No comments:
Post a Comment