சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு புதிய முறை அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 9, 2024

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு புதிய முறை அறிமுகம்

featured image

சென்னை, மார்ச் 9- நூல்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று படிக் கும் வசதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அறிமுகப் படுத்தப்படுகிறது.
சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் இயங்கி வருகிறது. 8 லட்சம் சதுர அடி பரப்புடன் 8 தளங்களுடன் கூடிய இந்த பிரமாண்டமான நூலகத்தில் 5 லட்சத்துக்கும் மேற் பட்ட புத்தகங்கள், குறிப்பு நூல்கள் உள்ளன.

இந்த நூலகத்துக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாச கர்கள் வந்துசெல்கின்றனர். குறிப்பாக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயா ராகிவரும் மாணவர்கள், ஆராய்ச் சியாளர்கள் அதிக எண்ணிக் கையில் வந்து படிக்கிறார்கள்.
11ஆ-ம் தேதி முதல் அறிமுகம்: இந்நிலையில், வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று நூல்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று படிக் கும் வசதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து நூலக அதிகாரிகள் கூறும்போது,
“இதர பொது நூலகங்களைப் போன்று உறுப்பினர்கள் தங் களுக்குத் தேவையான நூல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கும் வசதியை மார்ச் 11ஆ-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
முதல்கட்டமாகச் சிறுவர் பிரிவு மற்றும் தமிழ் பிரிவுநூல்களை நூலக உறுப்பினர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதி அளிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment