மதுரை, மார்ச் 13- மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டிடத்தை நிர் ணயித்த காலத்துக்குள் கட்டி முடிக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019இல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மதுரையு டன் பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பயன் பாட்டுக்கு வந்துள்ளன.
ஆனால் மதுரையில் இன்னும் கட்டுமானப் பணி தொடங்கப்பட வில்லை. மதுரையில் 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக் கப்பட்டது.
இருப்பினும் இது வரை கட்டுமானப் பணி கள் தொடங்கப்பட வில்லை. எனவே, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டத்தை நிர்ணயித்த காலத்திற்குள் கட்டி முடிக்கவும், கட்டுமானப் பணியில் உண்மையை மறைத்து பொய் அறிக்கை வெளியிடும் அரசு அதி காரிகளுக்கு அபராதம் விதிக்கவும், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவும் உத் தரவிட வேண்டும். இவ் வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு வழக் கறிஞர் வாதிடுகையில், “மதுரை எய்ம்ஸ் மருத்து வமனை கட்டட பணிக் கான டெண்டர் முடிந் துள்ளது.
2026இல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். எய்ம்ஸ் கட்டுமானப்பணி குறித்த முழு விபரம் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்” என் றார்.
இதையடுத்து நீதிபதி கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டு மான பணிகள் குறித்து மத்திய நிதித்துறை செய லாளர், மத்திய சுகாதாரத் துறை செயலாளர், இந்திய மருத்துவ கழக இயக்குனர், மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் பதி லளிக்க உத்தரவிட்டு விசார ணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment