தமிழர் தலைவர் வாழ்த்து!
உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புப்படி தேர்தல் பத்திர ஆவண விவரங்களை மார்ச்
6 ஆம் தேதிக்குள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தாக்கல் செய்யவேண்டும் என்ற உச்சநீதிமன்ற ஆணையை மதித்து தாக்கல் செய்யாமல், தகவல் திரட்ட காலதாமதம் ஆகும் என்பதால், ஜூன் மாதம்வரை கால அவகாசம் தரவேண்டும் என்று வாய்தா கேட்ட ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இத்தகவல்களை தாக்கல் செய்தாகவேண்டும் – ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம் நேர்மையை கடைப்பிடித்து நாளை (12-3-2024) மாலைக்குள் தாக்கல் செய்யவேண்டும்.
(6 ஆண்டில் பா.ஜ.க. 6,566 கோடி ரூபாய் பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.)
இது ஜனநாயக நாடு. அரசமைப்புச் சட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் உள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது; பாராட்டி வரவேற்கத்தக்க அருமையான நியாயத் தீர்ப்பு இது. (Landmark order of the Supreme Court).
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட இந்த சட்ட நெறிமுறைகளைக் காப்பாற்றிய மாண்புமிகு நீதிபதிகளுக்கு நமது பாராட்டும், வாழ்த்தும்!
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
11-3-2024
No comments:
Post a Comment