2.3.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 3 இணைச் செயலாளர்கள் மற்றும் 22 இயக்குநர்கள்/துணைச் செயலாளர்களை நேரடியாக தனியார் நிறுவனங்களில் இருந்து நியமிக்க ஒப்புதல் அளித் துள்ளது. (இட ஒதுக்கீடு கொள்கை இந்த நியமனங்களில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது)
* கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குருத்வாராக்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* உத்தரப்பிரதேசத்தில் இரட்டை எஞ்சின் அரசாங் கத்தின் உண்மை என்னவென்றால், அது “காட்டு ராஜ்ஜியத்திற்கு உத்தரவாதம்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கு – “பாஜக மற்றும் மோடி ஊடகங்கள் இணைந்து எப்படி ‘பொய் வியாபாரத்தில்’ ஈடுபடுகின்றன என்பதற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகப்பெரிய உதாரணம்” என்று அவர் இந்தியில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தி இந்து
* குஜராத் சட்டசபையில் வழங்கப்பட்ட தரவுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் 25,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், அவர்களில் 500 பேர் மாண வர்கள்.குஜராத்தில் அதிக தற்கொலைகள் நடப்பது குறித்து பிரதமர் ஏன் மவுனம் சாதிக்கிறார் என்று காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி
தி டெலிகிராப்
* 2023 ஆம் ஆண்டில். நிலையான வளர்ச்சி இலக்கு களை நோக்கி முன்னேறுவதில் அய். நா. மன்றம் வகுத் துள்ள விதியின்படி, இந்தியா 112ஆவது இடத்தில் உள்ளது பூட்டான் (61ஆவது, தெற்காசியாவில் சிறந்தது), மாலத் தீவுகள் (68ஆவது), இலங்கை (83ஆவது), நேபாளம் (99ஆவது) மற்றும் வங்கதேசம் (101ஆவது). இடத்திலும் உள்ளன
டைம்ஸ் ஆப் இந்தியா
* உ.பி.யின் 80 தொகுதிகளிலும் பாஜகவை தோற் கடிப்போம். ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் தேர்தல் பிரச்சாரம்.
– குடந்தை கருணா
Saturday, March 2, 2024
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Tags
# ஏட்டுத் திக்குகளிலிருந்து...
About Viduthalai
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
Labels:
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment