பா.ஜ.க.வில் சேர்ந்து சுத்தப்படுத்திக் கொள்ளலாம் : சரத்பவார் கிண்டல்
புனே, மார்ச் 9- பா.ஜனதா ‘வாஷிங் மிஷின்’ ஆக மாறி விட்டது, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர் கொள் பவர்கள் அந்த கட்சி யில் சேர்ந்து தங்களை சுத்தப்படுத்தி கொள்ள லாம் என்று சரத்பவார் விமர்சனம் செய்தார்.
ஆதர்ஷ் ஊழல்
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள லோனா வாலாவில் தேசியவாத காங்கி ரஸ்- சரத்சந்திர பவார் கட்சி பொதுக் கூட்டம் 7.3.2024 அன்று நடை பெற்றது. இதில் கட்சித் தலைவர் சரத் பவார் கலந்துகொண்டு பேசியதாவது:-
நாடாளுமன்றத்தில் உறுப்பி னர்கள் அனைவருக்கும் ஒரு சிறு கையேடு வழங்கப்பட்டது. பா.ஜனதா ஆட்சியில் இல்லாத போது என்னென்ன முறைகேடுகள் நடந்தன என்று அதில் கூறப்பட் டுள்ளது. மேனாள் மராட்டிய முதலமைச்சர் அசோக் சவான் ஆதர்ஷ் ஊழலில் ஈடுபட்டதாக அந்த கையேட்டில் குறிப்பிடப்பட் டுள்ளது. ஆனால் அடுத்த 7-ஆவது நாளில், அசோக்சவான் பா.ஜன தாவில் சேர்ந்து அந்த கட்சியின் சார்பில் மாநிலங்க ளவை உறுப் பினராகியுள்ளார். எனவே ஒரு புறம், நீங்கள் (பா.ஜனதா) குற்றச் சாட்டுகளை கூறுகிறீர்கள். மறு புறம், நீங்கள் அவரை உங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்கிறீர்கள்.
நீர்ப்பாசன ஊழல்
பிரதமர் நரேந்திர மோடி ஊழலை பற்றி பேசும்போது, எங்களது பிளவுபடாத தேசிய வாத காங்கிரசை விமர்சித்து இருந்தார். மராட்டியத்தில் ரூ.70 ஆயிரம் கோடிநீர்ப்பாசன ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டினார். அப்போது மராட்டியத்தில் நீர்ப் பாசன அமைச்சராக இருந்த அஜித்பவார் மீதுதான் அந்த ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் அவர் இப்போது பா. ஜனதா கூட்டணியில் உள்ளார்.
வாஷிங் மிஷின்
ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்கொள்பவர்களை கட்சியில் சேர்த்து சுத்தப்படுத்தக்கூடிய வாஷிங் மிஷின் ஆக பா.ஜனதா மாறிவிட்டது என்பதை தான் இவையெல்லாம் காட்டுகிறது. நாங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினோம். அதன் மூலம், நாங்கள் காந்தியார் மற்றும் ஜவஹர்லால் நேருவின் சித்தாந் தங்களில் உறுதியாக இருந்தோம். இன்று, அதிகாரத்தில் இருப்ப வர்கள் காந்தியாரைப் பற்றி உயர்வாக பேசுகிறார்கள். ஆனால் நேருவை இழிவுபடுத்துகிறார்கள். நேருவை அதிகம் விமர்சிக் கிறார்கள்.
நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் காந்தியையும், சுபாஷ் சந்திர போஸ் தலைமை யையும் ஏற்றுக் கொண்டது போல, நேருவின் தலைமையையும் அவ ருடைய பங்களிப்புகளையும் ஏற் றுக் கொண்டார்கள். ஆனால், இன்று நேருவையும், அவரது சித்தாந்தத்தையும் பிரதமர் மோடி அதிகம் விமர்சிக்கிறார்.
பத்திரிகைகளில் ‘மோடி கி ‘கியாரண்டி’ என்ற முழுப்பக்க விளம்பரங்கள் வெளிவருகிறது. இந்த விளம்பரங்களை வெளியிட மக்களின் வரிப்பணம்தான் பயன் படுத்தப்படுகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவ தாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் கடந்த பத் தாண்டுகளில் விவசாயிகளின் தற்கொலைகள்தான் கணிசமாக அதிகரித்துள்ளது.
-இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment