8.3.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ ராகுலின் நீதி பயணம் மார்ச் 17-ஆம் தேதி மும்பை யில் நிறைவடையும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ பா.ஜ.க.வில் சேர்ந்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் மீது மம்தா தாக்கு. இளைஞர்களின் வேலைகளை பறித்த அவரது தோல்வியை தேர்தலில் நாங்கள் உறுதி செய் வோம் என பேச்சு.
♦ பிரதமர் மோடியின் சிறீநகர் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பொது மக்கள் அல்ல, அரசு ஊழியர்கள். சிறீநகரில் இருந்து சுமார் 7,000 அரசு ஊழியர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பலர் பேரணியில் கலந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி அழைத்து வரப்பட்டனர் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ அரசின் முடிவை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. ஒவ்வொரு தனிநபரும் மற்றவர்களின் மறுப்பு உரிமையை மதிக்க வேண்டும். அரசாங்கத்தின் முடிவுகளுக்கு எதிராக அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க ஒரு வாய்ப்பு ஜனநாயகத்தின் இன்றியமையாத பகுதியாகும் எனவும் நீதிபதிகள் கருத்து.
♦ புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் அடக்கம் செய் யப்பட்டது. உள்துறை அமைச்சர் பதவி விலகல் செய்ய எதிர்க்கட்சிகள் கோரிக்கை.
றீ மோடி அரசாங்கம் தனது “சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை” மறைக்க நாட்டின் மிகப்பெரிய வங்கியை கேடயமாக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தி இந்து:
♦ தேர்தல் பத்திரங்கள் குறித்து இன்னும் விவரங்களை வெளியிடாததற்காக எஸ்பிஅய்க்கு எதிராக அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. என்ஜிஓ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், எஸ்பிஅய்யின் மனு மார்ச் 11ஆம் தேதி பட்டியலிடப்படும் என்றும், அவமதிப்பு மனுவையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை.
தி டெலிகிராப்:
♦ தொழில்துறை நண்பர்களின் தூண்டுதல் காரணமாக ஜாதிவாரி கணக்கெடுப்பை பிரதமர் மோடி எதிர்த்தார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
♦ 30 லட்சம் அரசு வேலைகள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி நிதி: இளைஞர்களை மய்யப்படுத்திய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்
– குடந்தை கருணா
No comments:
Post a Comment