சென்னை,மார்ச் 4- அய்யா வைகுண்டர் விஷ்ணுவின் அவதாரம் என்று கருத்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் வலுத்துள்ளது. அய்யா வைகுண்டரின் அவதார தினத் தையொட்டி எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வைகுண்டரை விஷ்ணு பகவான் என்று புகழ்ந்திருந்தார்.
இதற்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தமிழ்நாட்டின் சமய, சமத்து வம் கோட்பாடுகளை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டும் முயற்சி என்று குற்றம் சாட்டி யுள்ள அவர்கள் ஆளுநர் ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோரின் இது போன்ற அரசியலை எதிர்ப்பதாக கூறி யுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சமத்துவ தமிழ் மரபுகளை கையகப் படுத்தும் வேலையை தொடர்ந்து செய் வதாகவும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தலைவர் ரங்க நாதன் விமார்சித்துள்ளார்.
சிதம்பரத்தில் தாழ்த்தப்பட்ட சமூ கத்தினருக்கு பூணூல் போடுவது, வள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, வள்ளலாரை ஸநாதன சிமிழுக்குள் அடைப்பது போன்ற ஆன்மிக சித்து வேலைகளை தமிழ்நாட்டின் சமத்துவ ஆன்மிகம் உறுதியாக நிராகரிப்பதாக வும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாண வர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. பா.ஜ.க. ஹிந்துக்கள் ஆன கட்சி என் றால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராக குரல் கொடுக்காதது ஏன்? என்றும் தமிழ் ஆன்மிக சமூகத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.
Monday, March 4, 2024
Home
தமிழ்நாடு
அய்யா வைகுண்டர் விஷ்ணுவின் அவதாரம் என்பதா? ஆளுநருக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கடுங்கண்டனம்
அய்யா வைகுண்டர் விஷ்ணுவின் அவதாரம் என்பதா? ஆளுநருக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கடுங்கண்டனம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment