வன்முறைப் பேச்சு ஒன்றிய இணை அமைச்சர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

வன்முறைப் பேச்சு ஒன்றிய இணை அமைச்சர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு

சென்னை, மார்ச் 21- கருநாடக மாநிலம் பெங்களூருவில் ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்த் லாஜே 19.3.2024 அன்று செய்தி யாளர்களிடம் பேசும்போது, “தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று கருநாடகா வந்து, இங்கு வெடி குண்டு வைக்கின்றனர். அப்படித் தான் தமிழ்நாட்டிலிருந்து வந்த ஒருவர் ராமேசுவரம் கஃபே ஹோட் டலில் வெடிகுண்டு வைத்துள்ளார்” என்று குற்றம் சாட்டினார்.

ஒன்றிய அமைச்சரின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியது. மதுரை கடச்சனேந் தலைச் சேர்ந்த தியாகராஜன், மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “ஒன்றிய இணை அமைச்சர் ஷோபாவின் பேச்சு, கருநாடகா, தமிழ்நாடு மக்களுக்கு இடையே பகை மற்றும் வெறுப்பு ணர்வை வளர்க்க முயற்சிப்பதாக உள்ளது. தமிழ்நாடு மக்களை தீவிரவாதிகள் என பொதுமைப் படுத்தி பேசி, இரு மாநிலத்தவரி டையே வெறுப்பை உருவாக்க முயல்கிறார். வன்முறையைத் தூண் டும் வகையிலான அவரது பேச்சு, இரு மாநிலங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா மீது இந்திய குற்றவியல் சட்டம் 153, 153 (கி), 505 (1) (தீ), 505(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தில் புகார்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதி யுள்ள கடிதத்தில், “பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை என்அய்ஏ விசாரித்து வரும் நிலையில், இந்த நிகழ்வில் தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்பிருப்பதாக ஆதாரமின்றி ஒன்றிய அமைச்சர் குற்றம் சாட்டி யுள்ளார்.
இது இரு மாநில மக்களிடையே பகையையும், வெறுப்புணர்வையும் ஊக்குவிக்கும். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனும் தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

தேர்தல் ஆணையம் உத்தரவு: இதனிடையே, ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது திமுக உள்ளிட்ட கட்சிகள் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கருநாடக மாநில தேர்தல் பிரிவு தலைமை செயல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment