வல்லம், மார்ச். 1- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தேசிய அறிவியல் நாள் விழா நடைபெற்றது. விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் அவர்களின் நினைவாக உலகளாவிய நல்வாழ்வுக்கான, உலக ளாவிய அறிவியல் எனும் தலைப்பில் நடைபெற்ற கண்காட்சி அரங்கத்தை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேரா. வெ.இராமச்சந்திரன் மற் றும் பேரா. தி.நெ.சண்முகம் (மேனாள் கணிதப் பேராசிரியர் பல்கலைக்கழக பொறியியற் கல்லூரி, காஞ்சிபுரம்) ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அறிவியல் நாள் சிறப்புக்கள் குறித்து தலைமை உரையாற்றிய, பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேரா. வெ.இராமச்சந்திரன், ஆராய்ச்சித் துறையில் உங்கள் பங்களிப்பும், உங்கள் எளிமையும் பல மாணவர்களுக்கு உத்வேகமாக இருக்கும், நீங்கள் வாழ்க் கையில் வெற்றி பெற இன்று நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கும் போது நமது மாணவர்களின் குறிப் பிடத்தக்க சாதனைகள் மற்றும் பங் களிப்பினை எடுத்துக்கொள்வோம். அறிவியலும் பகுத்தறிவும் முடிவில்லாத சாத்தியக்கூறுகள் நிறைந்த உலகை நோக்கி நம்மை வழிநடத்தும் எதிர்காலத்தை உரு வாக்க பாடுபடுவோம் என்றார்.
தீர்வு காண்பது அறிவியல்
சிறப்பு விருந்தினர் தமது உரையில் நாம் நிறைய ஆராய்ச்சி செய்தல் வேண்டும் என்றும் இவ்வாராய்ச்சி செய்வதற்கு உந்து சக்தி, மக்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண் பது அறிவியல் என்றும் கூறினார். அய்ம்புலனான மெய், வாய், கண், மூக்கு, செவி போன்றவற்றில் மூக்கு ஒன்றைத் தவிர டிஜிட்டல் மயமாக கொண்டு வந்து விட்டோம். ஆனால் (Theory of Smell, Electronic Nose) போன்றவைகள் இருந்தாலும் நுகர்தல் மட்டும் இன்னும் முழுதாக கைவரவில்லை.
இதற்கு சற்று நீண்ட கால ஆராய்ச்சி தேவைப்படுகிறது. ஆராய்ச்சியில் விருப்ப முள்ளோர் இதில் ஈடுபடலாம். பொறியியல் என்பது அறிவியலை அடிப்படை யாகக் கொண்டதே – இன்றைய அறிவியல் கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல் எல்லாவற்றின் பயன்பாடுகளையும் தன்னுள்ளே வைத்து பொறியியலுக்கு உதவுவதே இன்றைய தொழில் நுட்பமாகும். கணிதவியலாளர் ஷானன் 1948இல் எழுதிய தகவல் தொடர்புகளின் கணிதக்கோட்பாடு மூலம் தான் இணையதள செய்தி தொடர்பிற்கான அடிப்படையைக் குறித்து எடுத்துக்கூறினார். மேலும் திருவாசகம், திருக்குறளில் உள்ள அறிவியல் கருத்துகளை சுட்டிக்காட்டி காண்பித்தார். திருவாசகத்தில் சொல் லப்பட்ட கருவின் மாதாந்திர வளர்ச்சி மற்றும் கரு வெளியில் வருவதைப் பற்றியும் மென்பொருள் மேன்மைகளை திருக்குறளில் உள்ள அறிவியல் கருத்து களை பற்றியும் விளக்கினார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ரிச்சர்ட் பெயின் மேன் மற்றும் நானோ தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த எரிக் ட்ரிக்ஸ்லர் ஆகி யோர் குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும் பல்கலைக்கழக வேதியியல் துறை பேரா. எஸ்.கோமதி தேசிய அறிவியல் நாளின் அறிக்கையினை வாசித் தார். இயற்பியல் துறை பேராசிரியர் காயத்திரி வரவேற்புரையாற்றினார்.
அறிவியல் படைப்புகள்
இதனைத் தொடர்ந்து அறிவியல் கண்காட்சியை சிறப்பு விருந்தினர் துவக்கி வைத்தார். பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்களால் உருவாக்கப் பட்ட அறிவியல் படைப்புகள் 137 மற்றும் சுவரொட்டிகள் 25 பள்ளி மாணவர்களின் பார்வைக்கு காட்சிப்படுத் தப்பட்டிருந்தன. இக்கண்காட்சியை 1,237க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கண்டும், விளக்கம் கேட் டுத் தெரிந்தும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். 20க்கும் மேற்பட்ட பள்ளி கள், 5 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 5 கல்லூரிகளும் இக்கண்காட்சி யில் இடம்பெற்றனர்.
நிறைவு விழாவில் பேரா. வி.சுகுமாரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) சிறப்புரையாற்றும் போது இப்பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. உலகில் சிறந்த பகுத்தறிவாதி யான தந்தை பெரியார் அவர்கள் கூறியது போல் ஏன் எதற்கு என்று ஆராய்ந்து கேள்வி கேட்டு தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இரண்டு நோபல் பரிசுகளை வாங்கிய சர்.சி.வி.இராமன் மற்றும் கணித மேதை இராமனுஜம் ஆகியோர் குறித்தும் கூறினார். மேலும் மருத்துவத் துறை யிலும் விவசாயத் துறையிலும் அறிவியல் சிறந்து விளங்கியிருக்கிறது என்று கூறினார். இந்நிகழ்வில் வெற்றி பெற்ற 129 மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப் பட்டன.
பல்கலைக்கழக பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா வெற்றி பெற்ற மாண வர்களை வெகுவாக பாராட்டினார்.
நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் எனும் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு போட்டி கள் 24.02.2024 அன்று நடைபெற்றன. மேலும் பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் கண்காட்சியில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவர் களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிறைவாக மேலாண்மை மற்றும் அறிவியல் துறை முதன்மையர் பேரா. பி.விஜயலெட்சுமி நன்றியுரை வழங்கி னார். அறிவியல் கண்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த துறைத் தலைவர்கள் இயக்குநர்கள், பேராசி ரியர்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment