சென்னை, மார்ச் 11- போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையவர் கள் பா.ஜ.க., அதிமுகவில்தான் உள்ளனர் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நேற்று (10.3.2024) அண்ணா அறிவாலயத்தில், சட் டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் திமுக சட்டப்பிரிவு தலைமை ஆலோசகர் மாநிலங்க ளவை உறுப்பினர் பி.வில்சன் எம்.பி. ஆகியோர் செய்தியாளர் களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
தி.மு.க.வை தேர்தல் களத்தில் களங்கப்படுத்தி, அரசியல் ஆதா யம் பெறலாம் என பாஜக தப்புக் கணக்கு போடுகிறது. இதற்கு துணையாக அதிமுகவும் உள்ளது. தி.மு.க. அரசை களங்கப்படுத்த வருமானவரித் துறை, சிபிஅய், அமலாக்கத் துறை வரிசையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவை (என்சிபி) இறக்கி விட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் குட்கா வியாபாரிகளுக்கு துணை யாக இருந்த அமைச்சர், அதிகா ரிகள் மீது சிபிஅய் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மேனாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் எடுக்கப்பட்ட பேப்பரில் ரூ.85 கோடி எந்தெந்த அமைச்சர் களுக்கு தரப்பட்டது என்ற விவரங்கள் உள்ளன. அதில், வருமான வரி, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜாபர் சாதிக் தேடப்படும் குற்றவாளியாக பிப்.15இ-ல் அறிவிக் கப்பட்ட நிலையில், பிப்.21இ-ல் மங்கை திரைப்பட விழாவில் பங் கேற்றுள்ளார். அப்போது என்சிபி எங்கே போனது. 2013இ-ல் ஜாபர் சாதிக் மீதான வழக்கில், பாஜகவின் வழக்குரைஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ்தான் அவரைக் காப்பாற்றினார்.
ஜாபர்சாதிக் போன்றவர்கள் கட்சியை விட்டே நீக்கப்பட்டுள்ள னர். உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராட்டிராவில்தான் அதிக மான போதைப்பொருள் வழக்கு கள் போடப்பட்டிருக்கின்றன.
ஜாபர் சாதிக் பற்றி சொல்கிற போது டில்லியிலும், வேறு மாநி லத்திலும்தான் போதைப்பொருள் பிடிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் இல்லை. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை போதைப் பொருள் நடமாட் டத்தை முழுமையாகத் தடுத்துள் ளோம். கஞ்சா பயிர் ஒரு சென்ட் கூட நடப்படாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
போதைப் பொருள் மாநிலம் போல தமிழ்நாட்டை சித்தரித் தால்தான், தமிழ்நாட்டின் வளர்ச்சி வட இந்தியாவில் பேசுபொருளா காது என்பதற்காகவே பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்ததும் புனிதர் களாகி விடுகின்றனர்.
ஜாபர் சாதிக் திமுகவை விட்டு நீக்கப்பட்டுவிட்டார். அவருடன் தொடர்புடையவர்கள் பாஜக, அதிமுகவில் தான் இருக்கின்றனர். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவோம். இவ்வாறு தெரிவித்தார்.
தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கூறிய தாவது: தேவையில்லாமல் இந்த விசாரணையில் திமுகவை சிலர் கூறி வருகின்றனர். என்சிபி அதி காரியின் பேட்டி அவதூறு செய்யும் எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது. எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இது போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தினால் அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடர்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment