சென்னை, மார்ச் 21- வடசென்னை, ஆவடி, திருவொற்றியூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்டுக் கூட்டம் 16.3.2024 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் தலைமையேற் றார். வருகை தந்த அனைவரையும் பொதுச்செயலாளர் ஆ.வெங்க டேசன் வரவேற்றார். தொடர்ந்து வருகை தந்தவர்களுடைய சுய அறிமுகத்திற்குப் பின்னால் இந்த கூட்டத்தின் நோக்கம் பற்றி பொதுச்செயலாளர் வி.மோகன் எடுத்துரைத்தார்.
அவருடைய நோக்க உரையை தொடர்ந்து பங்கேற்ற வட சென்னை மாவட்ட தலைவர் சண் முகநாதன், செயலாளர் இஜாஸ் உசேன், அமைப்பாளர் ராமு, உறுப்பினர்கள் தங்கதுரை, சந்திரவதனி ஆகியோர் தங்களது கருத்துளை யும், எப்படி தங்கள் மாவட்டத்தில் இயக்கத்தை வளர்த்தெடுப்பது என்பது பற்றியும் தங்களது கருத்துகளை பதிவு செய்தார்கள்.
தொடர்ந்து ஆவடி மாவட்ட தலைவர் ஜானகிராமன் தம்மு டைய மாவட்டத்தில் செயல்பாடு கள் எப்படி இருக்கிறது, தாங்கள் எப்படி செயல்பட்டு கொண்டிருக் கிறோம், தலைமை வழிகாட்டுவதை தொடர்ந்து நாங்கள் பின்பற்றி செய்திடுவோம் என்பதையும், ஆவடி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தாங்கள் இதுவரை செய்த பணிகளையும், எப்படி அமைப்பு ரீதியாக செயல்படுவது என்பது பற்றியும் உரையாற்றினார்கள்.
மாவட்ட துணை செயலாளர் சுந்தர்ராஜ் இயக்கத்தை பரவலாக்க மேற்கொண்ட நடவடிக்கை பற்றி கூறினார்.
திருவொற்றியூர் மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி மாவட் டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக் கைகள், பகுத்தறிவாளர்கள் கழகத் தின் சார்பில் தெருமுனை பிரச் சாரக் கூட்டம் நடத்தியது, தொடர்ந்து நடத்துவது என்பது பற்றி கூறினார். மாவட்ட செயலா ளர் சைலஸ் இன்னும் அதிக உறுப்பினர்களை தான் தொடர்பு கொண்டு சேர்க்க இருப்பதாக கூறினார். செல்வமணி, சிவகுமார் ஆகியோர் மாவட்டத்தில் உறுப் பினர்கள் அதிகரிப்பது பற்றி பேசினார்கள்.
தொடர்ந்து தலைமையேற்ற இரா. தமிழ்ச்செல்வன் இந்த இயக் கம் பரவலாக்கப்பட வேண்டியதன் அவசியம், இயக்கத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும், செயல்பாடுகளால் என்ன விளைவுகள், செயல்படாவிட்டால் ஏற்படும் தீமைகள் ஆகியன பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். நேரத்தின் அருமை கருதி தன்னுடைய உரையிலேயே நன்றி தெரிவித்து கூட்டத்தை குறித்த நேரத் தில் 8.00 மணிக்கு முடித்து வைத் தார்.
No comments:
Post a Comment