பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பு
உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் இப்படி நடந்து கொள்ள
ஆளுநர் ரவிக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
புதுடில்லி, மார்ச் 22- பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் உச்ச நீதிமன்றத்துடன் விளை யாட வேண்டாம் என கடும் கண்டனம் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, இதுதொடர்பாக முடிவு எடுக்க ஆளுநருக்கு 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது.
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த க.பொன்முடி, கடந்த 2006-20-11 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட் டதாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் கடந்த 2011-ஆம்ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016 ஆ-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையி னர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்தவ ழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், தமிழ்நாடு அமைச்ச ராக பதவி வகித்த பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து கடந்த டிச.19-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனால் க.பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.
இந்நிலையில், உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து க.பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், க.பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும், க.பொன் முடியை குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு தடை விதித் தும் உத்தரவிட்டது.
ஆளுநர் நிராகரிப்பு:
இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி தொடர்ந்து நீடிப்பதாக அறி விக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரி,அதற்கான பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முத லமைச்சர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார். ஆனால், ஆளுநர் அந்த பரிந்துரையை நிராகரித் தார்.
இதைத் தொடர்ந்து, தமிழ் நாடு அரசு சார்பில் உச்ச நீதி மன்றத்தில் ஆளுநருக்கு எதி ராக வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதிகள் ஜே.பி.பர்தி வாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு நேற்று (21.3.2024) விசாரணைக்கு வந் தது. அதன் விவரம் வருமாறு:
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரை ஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன்: பொன்முடிக்கு தண்டனை விதித்து பிறப்பிக் கப்பட்ட தீர்ப்புக்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், மீண்டும் அமைச் சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுக்கும் ஆளுநரின் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும். உச்ச நீதி மன்ற உத்தரவை மீறி ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள்:
ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? பதவிப் பிரமாணம் செய்து வைப்பது அரசமைப்பு சட்டத்துக்கு எதி ரானது என்று அவர் கூறுவது வினோதமாக இருக்கிறது. அவருக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார். ஆளுநரின் செயல் அரசமைப்பு சட்டத் துக்கு எதிரானது மட்டுமின்றி, எங்களுக்கும் கவலை அளிக்கி றது. ஆனால், அதை இந்த நீதி மன்றத்தில் நாங்கள் சத்தம் போட்டு கூற விரும்பவில்லை.
ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியவர்கள் சரியான ஆலோசனையை வழங்கவில்லை. உச்ச நீதிமன்றம் ஒருதண்ட னையை நிறுத்தி வைக்கும் போது, அது ஒரு தண்டனையை தடுக்கிறது என் பது ஆளுநருக்கு தெரியாதா. மனுதாரருக்கு மீண் டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததன் மூலம், உச்ச நீதி மன்றத்தை அவர் அவம தித்து உள்ளார். அரசியல் சாசனத்தை ஆளுநர் முறையாக பின்பற்றா விட்டால், மாநில அரசு என்ன செய்யும்.
ஜனநாயக முறைப்படி மனு தாரருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் பரிந்துரை செய்துள்ளார். அதை ஆளுநர் எப்படி நிரா கரிக்க முடியும். முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்தில் ஆளுநர் எப்படி தலையிட முடியும். அவருக்கு சட்டம் தெரியுமா, தெரியாதா. அவ ருக்கு ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞர் தகுந்த அறிவுரை கூற வேண்டும். இல்லாவிட்டால், கடுமையான கருத்துகளை பதிவு செய்ய நேரிடும். குறிப்பாக உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்.
ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞர் ஆர். வெங்கட் ரமணி: இந்தவழக்கை 22-ஆம் தேதிக்கு (இன்று) தள்ளிவைக்க வேண்டும். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிக்கிறேன்.
பி.வில்சன்: தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை எதிர்த்து ஒவ்வொரு முறையும் நாங்கள் இவ்வாறு நீதிமன்றத் தைத்தான் நாட வேண்டுமா?
நீதிபதிகள்: குற்ற வழக்கு களில் நீதிமன்றம் தண்டனை விதித்து பிறப்பிக்கும் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால் இழந்த பதவி தானாக வந்து விடும்தானே.
தமிழக அரசு தரப்பு: பொன் முடி விவகாரத்தில் ஆளுநர் தான் தவறு இழைத்துள்ளார். இவ்வாறு வாதம் நடந்தது.
மீண்டும் விசாரணை:
இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் ஆளுநர் தனது முடிவை 24 மணி நேரத் துக்குள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்களது நடவடிக்கை என்ன என்பதை இப்போது நாங்கள் கூறப் போவது இல்லை’’ என்று கெடு விதித்து விசாரணையை இன் றைக்கு தள்ளிவைத்துள்ளனர்.
No comments:
Post a Comment