தூத்துக்குடி, மார்ச் 23- “ஒன் றியத்தில் ஆட்சிமாற்றம் ஏற் பட்டதும் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும்” என்று தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.சார்பில் 2ஆவது முறையாக கனிமொழி, வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் 21.3.2024 அன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் தூத் துக்குடிக்கு வந்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி நகரில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். பின்னர் அவர் செய் தியாளர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா கட்சி தங்க ளோடு இல்லாதவர்களுக்கு எதிராக வருமான வரித்துறை, சி.பி. அய்.,அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறது.
யார்மீது குற்றம் சாட்டப் படுகிறதோ, அவர்கள் பா. ஜன தாவில் இணைந்தால், பா.ஜனதா என்கிற வாஷிங்மெஷின் அவர் களை சுத்தம் செய்து சுத்த மானவர்களாக மாற்றி விடு கிறது.
தேர்தல் ஜூரம்
தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, நெல்லை மாவட் டங்களில் மழை வெள்ளம் வரலாறு காணாத பாதிப்பு களை ஏற்படுத்தி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட னர். அப்போதெல்லாம் தமிழ் நாட்டுக்கு வராத பிரதமர், தேர்தல் ஜூரம் வந்ததும் அடிக்கடி வருகிறார். மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்ற பயத்தின் காரண மாகதான் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து கொண்டு இருக்கிறார்.
தூத்துக்குடியில் ரூ.16 ஆயி ரம் கோடியில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலைக்கு தமிழ் நாடு முதலமைச்சர் சமீபத்தில் அடிக்கல் நாட்டினார்.
அதுபோல இன்னும் பல தொழில் முதலீடுகள் தூத்துக் குடிக்கு வரவேண்டும் என் பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
வாக்குறுதி
கடந்த தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக் குறுதிகளை நிறைவேற்றி உள் ளோம். ரயில்வே தேவை உள் ளிட்ட சில கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் பலமுறை கேட்டால்தான் நிறைவேற்றி தரக்கூடிய சூழ்நிலை இருக் கிறது.
10 ஆண்டுகள் கடந்து இருந் தாலும் குலசேக ரன்பட்டி னத்தில் ராக்கெட் ஏவுதளத்தை எங்களால் கொண்டுவர முடிந் திருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும்.
தூத்துக்குடியில் டைட்டல் பார்க் பணிகள் நடக்கிறது. அதுபோல் கோவில்பட்டி, ஏரல் பகுதிகளில் நியோ டைட் டல் பார்க் அறிவிக்கப் பட்டு உள்ளது.
கோவில்பட்டி லிங்கம் பட் டியில் புதிய தொழில் பேட்டையையும் முதலமைச் சர் சமீபத்தில் அறிவித்துள் ளார்.
‘நீட்’ தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
நிச்சயமாக ஒன்றியத்தில் ஆட்சி மாற் றம் உருவாகும். அப்போது, தமிழ்நாட்டில் இருந்து ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கப் படும்.
-இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment