குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் மூடப்படமாட்டாது இயக்குநர் விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் மூடப்படமாட்டாது இயக்குநர் விளக்கம்

சென்னை, மார்ச் 21- ‘மாணவர்கள் எண்ணிக்கை குறைவான பள்ளிகளை, தற்போது மூடும் திட்டம் இல்லை’ என, பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட அதிகாரிகள் அது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட் டுள்ளது.

தமிழ்நாடு முழுதும், அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத் தின்படி நிர்ணயிக்கப்பட்ட எண் ணிக்கையை விட, குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட, பள்ளிக்கல்வி துறை திட்ட மிட்டிருந்ததாகவும், மாவட்ட வாரியாக இதற்கான பட்டியல் சேகரிக்கப்பட்டதாகவும், கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் முதற்கட்ட மாக, 32 பள்ளிகளை மூடி விட்டு, அங்கு படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிகளில் சேர்க்க முடிவானது என்றும் ஊடகங்களில் வதந்தி பரப்பப் பட்டதைத் தொடர்ந்து, இதனை மறுத்துள்ள தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல், மாணவர் சேர்க்கை துவக்கப்பட் டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நேற்று வரை, 2.19 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள் ளனர். ஒன்றாம் வகுப்பில் மட்டும், 1.88 லட்சம் பேர் சேர்ந்துஉள்ளனர்.
இதுமட்டுமின்றி, அரசு பள்ளி களில் உள்கட்டமைப்பை மேம் படுத்த, வரும் கல்வி ஆண்டில், 20,000 தொடக்க பள்ளிகளில் திறன் வகுப்பறைகளும், 8,000 அரசு நடுநிலை பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்களும் துவங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 80,000 ஆசிரியர்களுக்கு நவீன வழியில் பாடம் நடத்த, ‘டேப்’ என்ற கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.
மேலும், அரசு பள்ளி மாணவர் களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படு கிறது.
இந்நிலையில், சில மாவட்டங் களில் மாணவர் எண்ணிக்கை குறைவான, அரசு தொடக்க, நடு நிலை பள்ளிகளை மூட, மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக, தகவல்கள் வந்துள்ளன.

தற்போதைய நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க் கையை அதிகரிக்க மட்டுமே திட்ட மிடப்பட்டுள்ளது.
பள்ளிகளை மூடும் திட்டம் ஏதும் இல்லை. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் எச் சரிக்கையுடன் செயல்பட அறிவு றுத்தப்பட்டுள்ளது.

-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment