புதுடில்லி, மார்ச் 14- இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் உள்ள கோவில் சொத்துகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் செல்லும் என்று தெரிவித்து, இதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி
இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் கீழ், கோவில் சொத்துகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் வகுக்கப் பட்டு உள்ளன. இந்த விதிகளில் சொத்துகள் பாதுகாப்பு, பராமரிப்பு, நிர்வாகம் தொடர்பானவிளக்கங்கள் வழங்கப் படாத தால் இந்த விதிகள் செல்லாது என அறிவிக்கக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்ட விதிகளை ரத்து செய்வதற்கான எந்த கார ணங்களும் இல்லைஎனக்கூறி. மனுவை கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது இந்த உத்தரவுக்கு எதிராக ரமேஷ் தாக்கல் செய்தமேல்மு றையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசா ரித்தது. இதுதொடர்பாக பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு 12.3.2024 அன்று மீண்டும் விசாரித்தது.
தள்ளுபடி
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சாய் தீபக், விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என வாதிட்டார். இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜெயதீப் குப்தா, வழக்குரைஞர் டி.குமணன் ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், கோவில் சொத்துகள் பராமரிப்பு, பாதுகாப்பு விதிகள் செல்லும் எனத் தெரிவித்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
No comments:
Post a Comment