ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்
புதுடில்லி,மார்ச் 14- ராணுவ தளவாட இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதல் இடம்வகித்து வருவதாக ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 9.8% ஆக உள்ளது. இந்தப் பட்டியலில் 2ஆம் இடத்தில் சவூதி அரேபியா (8.4%), கத்தார்(7.6%), உக்ரைன் (4.9%), பாகிஸ்தான் (4.3%), ஜப்பான் (4.1%),எகிப்து (4%), ஆஸ்திரேலியா(3.7%), தென்கொரியா (3.1%), சீனா (2.9%) உள்ளன.
அதிகபட்சமாக ரஷ்யாவிடமிருந்து 36% இறக்குமதி செய்கிறது. பிரான்சிடமிருந்து 33%, அமெரிக்காவிட மிருந்து 13% இந்தியா இறக்குமதி செய்கிறது. 2018-22 ஆண்டில் இந்தியாவின் இறக்குமதி உலக மொத்த ஆயுத விற்பனையில் 11 சதவீதமாக இருந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சி
நாளை ஆர்ப்பாட்டம்
சென்னை, மார்ச் 14- குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய ஒன்றிய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் மார்ச் 15ஆம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) மூலம் மதச் சார்பின்மையை சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும், முசுலிம்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும், இதன்வழி அரசியல் ஆதாயம் தேடும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 15ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment