போலி மருந்து தயாரித்த கம்பெனிகளிடமிருந்து கொள்ளை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 22, 2024

போலி மருந்து தயாரித்த கம்பெனிகளிடமிருந்து கொள்ளை

தரமற்ற மருந்து தயாரித்த குற்றச்சாட்டுக் குள்ளான மருந்து நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க. பல கோடி லஞ்சம் வாங்கிய உண்மை தற்போது அம்பலமாகியுள்ளது.!
1. Hetero Labs & Hetero Healthcare
கரோனாவின் போது தரமற்ற ரெம்டெசிவர் மருந்து தயாரித்து விற்பனை.
தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவிற்கு கொடுத்த பணம் ரூ.60 கோடி.
2. Torrent Pharma
தரமற்ற ஆன்டிபிளேட்லெட் மருந்து தயாரிப்பு. அந்த மருந்து டெப்லாட் – 150 சாலிசிலிக் அமில சோதனையில் தோல்வியடைந்தது.
தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க.விற்கு கொடுத்த பணம் 77.5 கோடி
3.​​Zydus Healthcare
கரோனாவின் போது தரமற்ற ரெம்டெசிவர் மருந்து தயாரித்து விற்பனை.
தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க.விற்கு கொடுத்த பணம் ரூ.29 கோடி.
4.Glenmark
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தரமற்ற டெல்மா மருந்து தயாரிப்பு. தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க.விற்கு கொடுத்த பணம் 9.75 கோடி
5. Cipla
தரமற்ற இருமல் மருந்து மற்றும் தரமற்ற சிப்ரெம் ரெமிடெசிவர் மருந்து தயாரித்து விற்பனை. தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க.விற்கு கொடுத்த பணம் ரூ.39.2 கோடி.
6. IPCA Laboratories Limited
போலியான ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து ‘லாரியாகோ’ தயாரித்து விற்பனை.
தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க.விற்கு கொடுத்த பணம் ரூ.13.5 கோடி.
7. Intas Pharmaceutical
தரமற்ற Enapril-5 டேப்லெட் தயாரித்து விற்பனை.
தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க.விற்கு கொடுத்த பணம் ரூ.20 கோடி.
தரமற்ற மருந்துகளைத் தயாரித்த மேற்கண்ட ஏழு நிறுவனங்களில் எந்தவொரு நிறுவனத்தின் மீதும் எந்த நடவடிக் கையையும் பாஜக அரசு எடுக்கவில்லை.
மருந்து கம்பெனிகளிடம் இப்படி கோடி கோடியாக தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் பணம் வாங்கிக் கொண்டு – மருந்து தயாரிக்க அனுமதித்தால், அந்த நிறுவனங்கள் தரமான மருந்துகளை தயாரிக்குமா?
மக்களின் உயிரோடு விளையாடும் மருந்து நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரம் மூலம் கோடிக்கணக்கான ரூபாயைப் பறிப்பதுதான் பா.ஜ.க.வின் ஊழல் அற்ற தன்மைக்கு உத்தரவாதமா?
தரமற்ற மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை களுக்குப் பதிலாக, தேர்தல் பத்திரம் மூலம் ந(வ)ன்கொடை பறிப்பதுதான் ஒரு மக்கள் நல அரசு என்பதற்கு அடையாளமா?
தேர்தல் பத்திரமே மோசடி என்று ஆனதற்குப் பின் இத்தகைய நன்கொடைகளை அதன் வாயிலாகப் பறிப்பது என்பது ஆச்சரியமான ஒன்றல்ல!
நல்லாட்சியுமல்ல – நேர்மையான ஆட்சியு மல்ல பி.ஜே.பி. ஆட்சி! மக்களவைத் தேர்தலில் பாடம் கற்பிப்பதுதான் மக்கள் மீட்சிக்கு ஒரே மார்க்கம்!

No comments:

Post a Comment