குழிக்குள் கடவுளர் சிலைகள் கண்டெடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 3, 2024

குழிக்குள் கடவுளர் சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர்,மார்ச்.3— வீடு கட்ட குழிதோண்டிய போது எட்டு கடவுளர் சிலைகள் கண்டெடுக் கப்பட்டன. திருவாரூர் மாவட்டம் பூவ னூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் தனக்கு சொந்த மான இடத்தில் வீடு கட்டுவதற்காக வீட்டின் அருகே போர்வெல் அமைக்க குழி தோண்டினார். அப்போது குழியில் பயங்கர சத்தம் கேட்டதுடன் ஏதோ பொருட்கள் தென்பட்டுள்ளன.
இதுகுறித்து அவர் நீடாமங்கலம் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த வட்டாட் சியர் தேவேந்திரன் மற்றும் வரு வாய்த்துறை அலுவலர்கள், காவல் துறையினர் நிகழ்வு இடத்திற்கு வந்து அந்த குழியை பார்வையிட்ட னர். பின்னர் அவர்கள் முன்னிலை யில் தொடர்ந்து குழியை தோண்டிய போது பூமிக்கு அடியில் சோமாஸ் கந்தர், விநாயகர், நடராஜர், அம்மன் சிலை உள் பட 8 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் கண்டெடுக்கப்பட் டன.
அந்த சிலைகளையும், பூஜை பொருட்களையும் அதிகாரிகள் நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்று அங்கு வைத்துள்ளனர்.மேலும் அங்கு வேறு ஏதேனும் சிலைகள் உள்ளதா? என்பது குறித்து பொக் லைன் எந்திரம் மூலம் தோண்டி பார்த்தனர்.
இதுகுறித்து தொல்பொருள் ஆய்வுதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொல் பொருள் ஆய்வு துறையினர் அந்த சிலைகளை ஆய்வு செய்த பின்னர்தான் அந்த சிலைகள் அய்ம்பொன் சிலைகளா? அல் லது வெண்கல சிலைகளா? என் பது தெரியவரும். தொல்பொருள் ஆய்வுதுறையினர் ஆய்வு செய்த பிறகு சிலைகள் அனைத்தும் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப் பாக வைக்கப்படும் என வட்டாட் சியர் தேவேந்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment