குடந்தை, மார்ச் 19- திராவிடர் கழகத் தொழில் நுட்ப பயிற்சி கூட் டம் கும்பகோணம் பெரியார் மாளிகையில் 16.3.2024 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9:30 மணி வரை நடை பெற்றது.
சமூக வலைத்தளங்களில் கழகத் தோழர்களின் ஒருங் கிணைந்த செயல்பாட்டை மேம்படுத்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு பகிர்ந்து கொள்ளும் வகையிலும் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர் களின் வழி காட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று, பயிற்சி வகுப்பின் நோக்கம் குறித்த விளக்கத் தினை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. தஞ்சை ஜெயக்குமார் பேசும் போது, 91 வயதிலும் 19 வயது இளைஞரை போல் தற்கால டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியினை மிக ஆர்வமு டன் கற்றுக்கொண்டு நமக் கெல்லாம் ஆக்கம், ஊக்கமும் தந்து எல்லோரையும் இந்த தொழில்நுட்ப உலகத்திற்குள் வயது வித்தியாசம் இன்றி கொண்டு வரவேண்டும் என் பதற்காக, இந்த தொழில்நுட் பங்களை கற்றுக் கொள்ளும் வகையிலும் இன்றைக்கு 5 மாவட்டங்கள் உள்ளடக்கிய இந்த கூட்டத்தினை தமிழர் தலைவர் நடத்த சொன்னதால் இங்கே இந்த கூட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது .
ஆசிரியர் அவர்கள் எத் தனை பேர் வருகை தந்திருக்கி றார்கள். கூட்டம் எப்படி நடைபெற்றுக் கொண்டிருக் கிறது என்ற விபரத்தையும் கேட்டு அறிந்து கொண்டிருக் கிறார் .
நம்மை ஆசிரியர் அவர்கள் கவனித்துக் கொண்டே இருக் கிறார் – அதனால் நீங்கள் இந்த சமூக வலைத்தள பயிற்சியை கற்றுக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தனது வரவேற்பு உரையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் கேட்டுக் கொண் டார்.
நம்மிடம் இருக்கும் அலை பேசியைப் பயன்படுத்தி தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுவது எப்படி என்ற விபரங்களை மிக விளக்கமாக கழகத்தின் துணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் விளக் கினார். டுவிட்டர் பக்கம் என் கின்ற ஜ் வலைத்தளம் இல்லாத வர்களை கியூ,ஆர், கோடு மூலம் அதனை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான செயல் பாடுகளை சொல்லி அனைவ ருக்கும் அதனை பதிவிறக்கம் செய்து கொடுத்தார் எக்ஸ் வலைத்தளத்தை பயன்படுத்தி அதில் செய்திகளை எப்படி பதிவிடுவது, படங்களை எப்படி சேர்ப்பது, அதனை எப்படி ட்ரெண்டிங் ஆக்குவது என்ற விவரங்களையும் எளி தாக புரிந்து கொள்ளும் வகை யில் விளக்கினார்.
அதேபோல் பேஸ்புக், வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை எப்படி பயன்படுத்துவது என்ற விவரங்களையும் அதன் பயன் பாடுகளையும் விளக்கினார் .
நாம் வெளி மாநிலங்க ளுக்கோ அல்லது வெளிநாடு களுக்கோ செல்லும்போது விமான நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிக் கடை களில் அந்தந்த நாட்டின் மொழிகளில் எழுதப்பட்டு இருப்பதை நாம் எப்படி நமது மொழியில் தெரிந்து கொள்வ தென கூகுள் மூலம் சென்று சர்ச் செய்து அதில் வரும் லென்ஸ் மூலம் ஸ்கேன் செய்து பிறகு அதனை மொழிமாற்றம் செய்தால் நாம் என்ன மொழி யில் கேட்கிறோமோ அந்த மொழியில் அதனை நாம் படித்து தெரிந்து கொள்ளலாம், என்று சீன மொழியில் எழுதப் பட்டிருந்ததை க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து அதனை தமிழில் மொழி மாற்றம் செய்து காண்பித்தார். அதில் சீன புத்தாண்டு வாழ்த்துக்கள் டிராகன் ஆண்டு என சீன மொழியில் இருந்ததை கூகுள் மூலம் ஸ்கேன் செய்த பிறகு அதை தமிழில் படித்து தெரிந்து கொள்ளமுடிந்தது.
இந்த செயலியை கொண்டு நாம் எங்கு சென்றாலும் எந்த மொழியில் இருந்தாலும் ஸ்கேன் செய்து தமிழில் மொழி மாற்றம் செய்து படித்துக் கொள்ளலாம் இது நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விளக்கமாக செய்து காட்டி ஆச்சரியத்தில் ஆழ்த்தி னார். இதேபோன்று மேலும் பல செயலிகளை பயன்படுத்தி நமது கழக ஏடுகளான விடு தலை, பெரியார் பிஞ்சு, பெரியார் டிவி ஆசிரியரின் அறிக்கைகள், கழக நாள்காட்டியை கொண்டு நடைபெறும் கழக நிகழ்ச்சி களை எல்லாம் அறிந்து கொள்ள முடியும் என்ற விளக் கத்தையும் அதனை எப்படிப் பயன்படுத்தி தெரிந்து கொள் வது என்றும் கூறினார் .
ஆசிரியரின் முக்கியமான செய்திகளையும் அறிக்கைக ளையும், எப்.எம். வாயிலாகவும் கேட்கும் தொழில்நுட்பத்தை விளக்கி கேட்க வைத்தார். பல தொழில் நுட்பங்களை கற்றுக் கொடுத்து இந்த அலைபேசியில் இத்தனை தொழில்நுட்பங் களா என்று வியக்கும் அள விற்கு அவரின் பயிற்சி வகுப்பு வியக்க வைத்தது . எல்லோருக் கும் பயனுள்ளதாக இருந்தது எல்லோரையும் கற்றுக்கொள்ள வைத்து அறிவியல் தொழில் நுட்ப உலகத்திற்கு அழைத்துச் சென்றது.
நமது அரசியல் இன எதிரி களால் இந்த சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான கற்பனை யான கட்டுக் கதைகளை எல் லாம் திராவிட கொள்கைக ளுக்கு எதிராக பரப்பி வரு கிறார்கள்.
நாம்இதில் கவனமாக இருந்து நாமும் சமூக ஊட கங்களில் அது பொய் என்பதை விளக்க வேண்டும். பிஜேபி எப்படியும் தமிழ்நாட்டில் கால் ஊன்ற முயற்சிக்கிறது. அதனை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இந்த நாடாளுமன்ற தேர்தலில் இந் தியா கூட்டணி வெற்றி பெற வாக்களிக்கும் நாள் வரை நாம் கடுமையாக உழைக்க வேண் டும் . வேலை நேரம் போக ஓய்வு நேரங்களில் “2024 நமது தேர் தல் பணிகள்” என்ற whatsapp குரூப்பின் மூலம் வரும் செய்தி களை பகிருங்கள் நீங்களும் நண்பர்களை உறவினர்களை இணைத்து புதிதாக வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கி அதில் செய்திகளை அனுப்பிக் கொண்டே இருங்கள்.
மோடி குடும்பம் அல்ல திராவிட குடும்பம் என்று ஆசிரியர் ட்ரெண்டிங் ஆக்கி யது போல் – வேண்டாம் மோடி மீண்டும் மோடி என்ற செய்தி களை பரவலாக்குங்கள் – இந் தியா கூட்டணி வெற்றி பெற உழையுங்கள் நன்றி வணக்கம்.
என்று பயிற்சி வகுப்பை நிறைவு செய்தார்.
பகுத்தறிவாளர் கழக ஊட கப்பிரிவு செயலாளர் அழகிரி சாமி, கழகத்தின் ஊடகப் பிரிவுகள் எந்தெந்த வகையில் எல்லாம் எத்தனை பெயர்களில் செயல்படுகிறது என்பதனை விளக்கிப் பேசினார். அதில் இணைந்து கொண்டு எல் லோரும் சப்ஸ்கிரைப் செய்து கொண்டு செயல்படுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
கும்பகோணம் மாவட்ட செயலாளார் சு. துரைராஜ் அனைவருக்கும் நன்றி கூறி னார்.
இந்த பயிற்சிக் கூட்டத்தில் கும்பகோணம் மாவட்ட தலை வர் வழக்குரைஞர் கு.நிம்மதி நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார், குடந்தை மாநக ரத் தலைவர் வழக்குரைஞர் ரமேஷ், செயலாளர் சிவக் குமார் மற்றும் கழகத் தோழர் கள். மயிலாடுதுறை மாவட்ட தலைவர், செயலாளர் தளபதி ராஜ், மாவட்ட துணை செய லாளர் நாகரத்தினம் நாகை மாவட்ட தலைவர் வி .எஸ். டி .ஏ. நெப்போலியன். மாவட்ட செயலாளர் ஜெ.பூபேஸ்குப்தா நாகை நகர தலைவர் செந்தில் குமார், மாநில ப.க. அமைப் பாளர் நாகை முத்துகிருஷ்ணன், மாநில இளைஞரணி செயலா ளர் நாகை நாத்திக.பொன்முடி. காரைக்கால் மாவட்ட செய லாளர். பொன்.பன்னீர் செல் வம் இளரஞணி செயலாளர் லூயிஸ்பியர், பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முருகேசன் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்ட னர்.
No comments:
Post a Comment