நீலமலை, மார்ச் 7- நீலமலை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம் குன்னூர் மருத்துவர் கவுதமன் அவர்களது இன்னிசை இல்லத்தில் 3.3.2024 ஞாயிறு காலை 10.00 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பொறியாளர் ஈஸ்வ ரன் தலைமையில் நடைபெற்றது.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தரும.வீரமணி, நீலமலை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் ச.ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் சி.இராவணன், மாவட்ட தலைவர் மு.நாகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பெ.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா.வாசு தேவன் அனைவரையும் வர வேற்று பேசினார்.
மாநில அமைப்பாளர் தரும.வீரமணி பகுத்தறிவாளர் கழகம் ஏன் தேவை எனபது பற்றி எடுத்துரைத்தார்.
மாநில பொதுச்செயலாளர் வி.மோகன் கலந்துரையாடல் கூட்ட நோக்கம், இயக்க செயல் பாடுகள், கடந்த மூன்று மாத செயல்பாடுகள், இயக்கத்தை விரிவுபடுத்துவது எப்படி?, உறுப்பினர்களிடம் தொடர்பு கொள்வது எவ்வாறு? நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து அனைவரிடமும் விவாதித்து இன்னும் செய்ய வேண்டியது பற்றி கூறினார்.
தொடர்ந்து பங்கேற்ற சண் முகசுந்தரி, பி.மூர்த்தி, அ.தினேஷ், தி.தினகரன், காந்திபுரம் சத்திய நாதன், ஆகியோர் தங்களது கருத்துகளையும் சந்தேகங்க ளையும் கூறினார்கள்.
தொடர்ந்து மருத்துவக்குழும இயக்குனர் மருத்துவர் கவுதமன் அவர்கள் நீலமலை மாவட்டத் தில் இயக்க செயல்பாடுகள் மற்றும் சந்தித்த சவால்கள் பற்றி கூறினார்.
பகுத்தறிவாளர் கழகம் தீவிர மாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறினார்.
இறுதியாக மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் பகுத்தறி வாளர் கழகத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி, நோக்கம், யாரை உறுப்பினராக சேர்க்க வேண்டும், அமைப்பை எப்படி மாவட்டத்தில் வலுப்படுத்திட வேண்டும், மாவட்டத்தின் செயல்பாடுகள் இன்னும் ஒன் றிய அளவில் விரிவு படுத்துவது எப்படி?, என்பது பற்றியும் எடுத் துரைத்து இயக்க செயல்பாடு களை எளிமையாக செய்து முடிப்பது எப்படி? என்பது பற்றியும் கூறினார். இறுதியில் மாவட்ட பொறுப்பாளர்
ர.ராம்குமார் நன்றி கூறினார்.
அனைவருக்கும் மதிய உணவு மருத்துவர் கவுதமனால் அவர் களால் அவரது இல்லத்திலேயே வழங்கப்பட்டது
No comments:
Post a Comment