தி.மு.க. அரசின் மகளிர் நலன் டாக்டர் முத்துலட்சுமி திட்டத்தின் கீழ் கருவுற்ற பெண்களுக்கு மூன்று தவணைகளில் நிதி உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 20, 2024

தி.மு.க. அரசின் மகளிர் நலன் டாக்டர் முத்துலட்சுமி திட்டத்தின் கீழ் கருவுற்ற பெண்களுக்கு மூன்று தவணைகளில் நிதி உதவி

சென்னை,மார்ச் 20– டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி திட்டத்தின்கீழ் தமிழ் நாட்டில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணை களாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுநிதியு தவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகி றது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் கருத் தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் விவரங் களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து, பிக்மி’ எண் பெற்றவுடன் ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக் கில் வரவு வைக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, நான்காவது மாதத்துக்குப் பின்னர் இரண்டாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். இதற்கிடையில், உடல் திறனை மேம் படுத்தும் வகையில் சத்து மாவு, இரும்புச் சத்து டானிக், உலர் பேரிச்சை, பிளாஸ்டிக் கப், பக்கெட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு அடங்கிய ரூ.2 ஆயிரம் மதிப்பி லான பெட்டகம் இரண்டு முறை வழங் கப்படுகின்றன.

அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் மூன்றாவது தவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4ஆவது தவணை யாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு ஒன்ப தாவது மாதம் முடிந்தவுடன் அய்ந் தாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் என ரூ.14 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18 ஆயிரம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதுவரை தமிழ்நாடு முழுவதும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.11,702 கோடி நிதி 1.14கோடி பெண் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாத்ருவந்தனா யோஜனா திட் டத்தின்நிதி பங்களிப்புடன் செயல்படுத் தப்படும் அத்திட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதனடிப்படையில், இதற்குமுன்பு வரை அய்ந்து தவணைகளாக வழங்கப் பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி இனி மூன்றுதவணைகளில் வழங்கப்படவுள் ளது. கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9ஆவது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது.
அதேபோல், பேறு காலத்தில் மூன்றா வது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த புதிய நடை முறை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதற்கான அரசாணை பிறப்பிக்கப் பட்டிருந்த நிலையில், புதிய நடை முறையை செயல்படுத்துவது குறித்த அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட சுகா தாரத் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment