சென்னை, மார்ச் 8 தேர்தல் பத்திர ஊழலை மறைக்க பாரத ஸ்டேட் வங்கி ஒன்றிய பாஜக அரசுக்கு துணை போவதாக கூறி, பாரத ஸ்டேட் வங் கியை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை நுங்கம்பக்கம் கல்லூரி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை தலைமை அலுவலகம் முன்பு நேற்று (7.3.2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பேசியதாவது:
தேர்தல் பத்திரம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பாரத ஸ்டேட் வங்கி பட்டியலை தேர் தல்ஆணையத்தில் கொடுக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் வழங்க அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி மனுதாக்கல் செய் துள்ளது. நாட்டு மக்களுக்கு மத்திய பாஜக அரசின் மோசடிகள் தெரிந்து விடும் என்பதை மறைப்பதற்காக தான் அவ்வாறு செய்துள்ளது.
முதன்முதலில் கணினி மயமாக் கப்பட்ட வங்கி ,பாரத ஸ்டேட் வங்கிதான். மொத்தம் 22 ஆயிரத்து 217 பத்திரங்கள் குறித்த பட்டியலைத் தான் வழங்க வேண்டும். அதற்கு 4 மாதங்கள் அவகாசம் கேட்கிறது.
சீன நாட்டிலுள்ள நிறுவனங்களி டம் இருந்தும், வடகொரிய நிறு வனங்களிடமிருந்தும் பாஜகவுக்கு பணம் வந்திருப்பதாக தகவல் வருகிறது. தமிழ்நாட்டில் நிவாரண தொகையாக ரூ.37 ஆயிரம் கோடிவழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் கேட்டிருந்தார்.
இதுவரை ஒரு ரூபாய் கூட வர வில்லை. அதன் பிறகு எப்படி பிரதமர் மோடியால் தமிழ்நாட்டுக்கு வர முடிகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. அவரை தமிழ்நாடு மக்கள்தோற்கடிக்கும் காலம் வந்து விட் டது. இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோன்று தமிழ்நாட்டில் கட்சி அளவிலான 64 மாவட்டங்களிலும், 50 ஒன்றியங்களிலும் என மொத்தம் 114 இடங்களில் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், மேனாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விஷ்ணு பிரசாத் எம்.பி, துணைத் தலை வர்கள் முருகானந்தம், கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர்கள் செல்வம், அருள் பெத்தையா, தமிழ்ச்செல்வன், தளபதி பாஸ்கர், இலக்கிய அணி தலைவர் புத்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment