அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 11, 2024

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

சென்னை, மார்ச் 11- தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளியில் அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத் திய காலை உணவு திட்டம் நடப்பு நிதி ஆண்டில் விரிவாக்கம் செய்யப் பட உள்ளதாக நிதிநிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை உணவு திட்டம்

பள்ளிக்கு காலை நேரத்தில் செல்லும் குழந்தைகள் பெரும் பாலானவர்கள் காலை உணவை தவிர்ப்பதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட் டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலமாக ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தினசரி காலை உணவு அரசு வெளியிட்டுள்ள அட்டவணையின்படி வழங்கப் பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்காக 2023 ஆம் ஆண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக நிதிநிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதனை தொடர்ந்து ஊரகப் பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதற்காக 2024 ஆம் ஆண்டில் 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய் யப்படும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment