பெங்களூரு, மார்ச் 2 கடந்த 2014 ஆம் ஆண்டு கருநாடகாவில் சித்தராமையா முதலமைச்சராக இருந்த போது ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க உத்தரவிட் டார். கடந்த 2018ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிந்தது. இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பைப் பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் தலைவர் ஜெயப் பிரகாஷ் எக்டே தலைமையிலான குழு நடத்தியது.
தற்போது சித்தராமையா மீண்டும் ஆட்சியில் உள்ள நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை முற்றிலும் அறிவியல் பூர்வமானது எனக் கருநாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஜெயப் பிரகாஷ் எக்டே தெரிவித்துள்ளார்.
அவர் இதில் சுமார் 1 கோடியே 35 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 5.90 கோடி பேரிடம் தகவல்கள் சேகரிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பில் மக்களின் வயது, வருமானம், கல்வி உள்ளிட்ட 54 கேள் விகள் பற்றிய தகவல்கள் எடுக்கப் பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
‘சிபிஅய்’ பிஜேபியின் கைப்பாவையா?
அகிலேஷ் யாதவ் கேள்வி
லக்னோ, மார்ச் 2 கடந்த 2012-_2016 காலகட்டத்தில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசமுதலமைச்சராக பதவி வகித்தார். அப்போது, சுரங்க குத்தகை சட்ட விரோதமாக நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர் பாக விசாரணை நடத்த அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக 2019-ஆம் ஆண்டு சிபிஅய் வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் அகிலேஷ் யாதவ் சாட்சியாக சேர்க்கப்பட்ட நிலையில், சாட்சி விசாரணைக்கு பிப்ரவரி 29ஆ-ம் தேதிக்குள் ஆஜராகும்படி அவருக்கு சிபிஅய் அழைப்பாணைஅனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் நேற்று (29.2.2024) கூறுகையில், “பாஜகவின் கைப்பாவையாக சிபிஅய் செயல்படுகிறது. சமாஜ்வாதியை குறி வைத்து பாஜக இயங்குகிறது. 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் சமயத்தில் எனக்கு அழைப்பணை அனுப்பப் பட்டது. தற்போது அடுத்த தேர்தல் வந்துவிட்டது. இப்போது மீண்டும் அழைப்பணை அனுப்பப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் எனக்கு அழைப் பணை வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நிறைய முன்னெடுப்புகளை செய்ததாக சொல்லும் பாஜக, ஏன் தேர்தல் நெருங் கும் சமயத்தில் எங்களைப் பார்த்து பயப்படுகிறது” என்றார்.
No comments:
Post a Comment