செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 23, 2024

செய்தியும், சிந்தனையும்....!

தொடங்குமா, முடியுமா?
* தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் கோவையிலிருந்து தொடங்கும்.
– பி.ஜே.பி. அண்ணாமலை பேட்டி
>> தொடங்குமா, முடியுமா?
இப்படிப் பேசுவது யார்?
* 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு தி.மு.க. சொந்தம் கொண்டாடுவதா?
– அன்புமணி ராமதாஸ் கண்டனம்
>> வி.பி.சிங் வந்தால், கதவை சாத்துங்கள் என்று சொன்னவர்களா, இப்படிப் பேசுவது?
வசதியாக மறந்து போச்சா?
* மதச்சார்பற்ற நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் அவசியம்.
– ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா
>> ஹிந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை தேவை என்பதை ஏன் சொல்ல முடியவில்லை?

No comments:

Post a Comment