உச்சநீதிமன்றத்தை நாடியது கேரள அரசு
திருவனந்தபுரம், மார்ச் 18- சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங் கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கேரள அரசு சிஏஏ-வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியுள் ளது.
இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்ட வர்க்கு கடந்த காலங்களில் குடி யுரிமை வழங்கப்பட்டு வந்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ் தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக் கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிருத் துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடி யுரிமை வழங்கும் வகையில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு அமல் படுத்தியுள்ளது.
இசுலாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதன் மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே முற்றுமுழுதாக துடைத்தெறியப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
எனவே இச்சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக் கின்றன.
டில்லி பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா, அசாம் அனைத்து மாணவர்கள் கூட்ட மைப்பு என மாணவர்கள் தீவிரமாக போராட்டத்தில் இறங்கியுள்ள னர்.
அதேபோல எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்களான மு.க.ஸ்டா லின், பினராயி விஜயன், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் சிஏஏ-வை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
குறிப்பாக பினராயி விஜயன் இதுகுறித்து கூறுகையில், “நாட்டு மக்களைக் குழப்புவதற்காக தேர் தல் நெருங்கும் வேளையில் குடியு ரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை ஒன்றிய அரசு அறிவித் துள்ளது.
மக்களவை தேர்தல் அறிவிக்கப் படுவதற்கு முன்னதாக, சிகிகி தொடர்பான அறிவிப்பை உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள் ளது. மக்களைப் பிளவுபடுத்துவ தற்காகவும், வகுப்புவாத உணர்வு களைத் தூண்டுவதற்காகவும், அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படைக் கோட்பாடுகளைக் குலைப் பதற்காகவுமே ஒன்றிய அரசு இதைச் செய்துள்ளது.
இந்த நடவடிக்கையை நாம் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும்.
சங்பரிவார் அமைப்புகளின் இந்துத்துவா வகுப்புவாத கொள் கையின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்க முடிகிறது. முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொடுக்க மறுப்பது அரசமைப்பை அப்பட்டமாக மீறு வதாகும்.
இது மதத்தின் அடிப்படையில் இந்திய குடியுரிமையை வரைய றுப்பதற்கு சமம். மனிதநேயம், நாட்டின் மதச்சார்பின்மை மற் றும் மக்களுக்கு இது ஒரு வெளிப்படையான சவால்.
இசுலாமிய சிறுபான்மையி னரை இரண்டாம் தர குடிமக் களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கேரள அரசு பலமுறை கூறி யுள்ளது.
அந்த நிலைப்பாட்டை மீண் டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம். இந்த வகுப்புவாத மற்றும் பிளவு படுத்தும் சட்டத்தை எதிர்ப்பதில் கேரளா ஒன்றுபட்டு நிற்கும்” என்று கூறியிருந்தார்.இந்நிலையில், சிஏஏவை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தை கேரள அரசு நாடியுள்ளது.
No comments:
Post a Comment