சிறீரங்கத்தில் சிலை நகர்த்தி வைக்கப்பட்டதாம் பக்தர்கள் திடீர் போர்க் கொடியாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 13, 2024

சிறீரங்கத்தில் சிலை நகர்த்தி வைக்கப்பட்டதாம் பக்தர்கள் திடீர் போர்க் கொடியாம்!

featured image

சிறீரங்கம், மார்ச்.13- சிறீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக் தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர்த்தி வைக்கப்பட்ட சிலை
சிறீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை யானதாக கூறப்படும் இச் சிலை முன்பு கொடியேற்றும் மண்டபத் தின் மீது இருந்தது. கடந்த
2015-ஆம் ஆண்டு கோவில் நிர் வாகத்தால் அந்த சிலை சற்று நகர்த்தி வைக்கப் பட்டது. இதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அந்த சிலையை ஏற்கெனவே இருந்த இடத்தி லேயே மீண்டும் அமைக்க வேண்டும். மூலவர் ரெங்கநாதர் திருவடியை முன்பிருந்த மாதிரியே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த் தையில், குழு அமைத்து தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது.

போராட்டம்
ஆனால் பேச்சுவார்த்தை நடத்தி 6 மாத காலமாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படாததை கண்டித்தும், மேற்கண்ட கோரிக் கைகளை நிறை வேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடு வோம் என்று கூறியும் சிறீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர் போராட் டம் நடத் தினர். இதில் அவர்கள், ஒருங்கி ணைப்பாளர் சீனிவாசன் தலைமை யில் ஜால்ரா சுமார் 2 மணி நேரம் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
கோரிக்கைகளை மனுவாக வழங்கினால், அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை ஆணையர் அன்பு உறுதி அளித்தார். இதனையடுத்து அனைவரும் போராட்டத்தை கை விட்டு, கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment