தூத்துக்குடி, மார்ச். 4- எல்லோ ருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் 2ஆ-வது நாளாக நேற்று (3.3.2024) நடை பெற்றது.
அதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி, “பாஜக ஆட்சிபெண்களுக்கு எதி ரான ஆட்சி. திரும்ப திரும்ப இங்கு வந்து மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறார்கள்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டி லேயே குடியேறினாலும் அவருக்கு வாக்குகள் கிடைக்காது” என்று விமர்சித்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் நடைபெற்ற கூட் டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், “பாஜகவும், அதிமுகவும் யார் கூட்டணி என்பது தெரியாமல் கட்சிகளை அழைத்துக் கொண்டி ருக்கின்றன” என விமர்சித்தார்.
வேலூர் கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரை முருகன், வாரிசு அரசியல் பற்றி பிரதமர் மோடி பேசுவதால் எந்த கவலையும் இல்லை என்றார்.
கோவை கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பங்கேற்காத ஒரே பிரதமர் மோடி தான் எனவும், 10 ஆண்டுகளாக அவர் கேள்வி நேரத்தின் போது எப்போதும் அவையில் இருந்ததே இல்லை எனவும் விமர்சித்தார்.
நாகையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு பாடல் பாடி பாஜகவை விமர்சித்தார்.
தமிழ்நாட்டிற்கு வந்தால் வணக்கம் என்று கூறியும், திருக்குறளை குறிப்பிட்டும், தமிழ் மீது அக்கறை செலுத்தும் பிரதமர் மோடி, திட்டங்களுக்கு மட்டும் ஏனோ ஹிந்தியில் பெயர் வைப்ப தாக சாடினார்.
கடலூர் கூட்டத்தில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதிமுகவினர் தாய் இல்லாத பிள்ளையாக இருப் பதாகவும், அவர்கள் குழப்பத்துடன் இருப்பதால் யாரும் அதிமுகவி னரை திட்டாதீர்கள் எனவும் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment