தேர்தல் பத்திரங்கள் ஸ்டேட் வங்கியின் அபத்தமான நிலைப்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 9, 2024

தேர்தல் பத்திரங்கள் ஸ்டேட் வங்கியின் அபத்தமான நிலைப்பாடு

featured image

உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசமைப் புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும், அப்பட்டமாகவே தன்னிச்சையானது என்றும் கூறி அதனை ரத்து செய்திருக் கிறது. தேர்தல் பத்தி ரங்கள் திட்டம் என்பது தாங்கள் பெறும் அரசியல் லஞ்சத்தை சட்டப்பூர்வமானதாக மாற்றுவதற் காகவே மோடி அர சாங்கத்தால் கொண்டு வரப்பட்டதால், இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
மோடி அரசாங்கம், இந்தத் தீர்ப்பை அமல்படுத்து வதைத் தள்ளிப்போடுவதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலமாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.
உச்சநீதிமன்றம், 2019 ஏப்ரலுக்குப்பின் வாங்கி யுள்ள அனைத்து தேர்தல் பத்திரங்களின் விவரங்க ளும் அவை வாங்கப்பட்ட தேதி, வாங்கியவரின் பெயர் மற்றும் தேர்தல் பத்திரத்தின் ரூபாய் மதிப்பு உட்பட அனைத்தையும் பொதுவெளியில் வெளியிட வேண் டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.

21 நாட்களுக்குப் பதில்
116 நாள் வேண்டுமாம்
தேர்தல் பத்திரங்கள் பரிவர்த்தனையை முழுமை யாக செய்து வந்த ஸ்டேட் வங்கி, மார்ச் 6ஆம் தேதிக் குள் தலை மைத் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் பத்திரங்களின் விவரங்கள் அனைத்தையும் சமர்ப்பித் திட வேண்டும் என்றும், அதன் பேரில் தலைமைத் தேர்தல் ஆணையம் மார்ச் 13 வாக்கில் அனைத்து விவரங்களையும் பொது மக்களுக்குத் தெரியப்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஸ்டேட் வங்கி, மார்ச் 4 அன்று உச்சநீதி மன்றத்தை அணுகி, தேர்தல் பத்திரங்கள் பரிவர்த்தனைகள் சம்பந்த மான விவரங்களை சமர்ப்பித்திட மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக் கிறது. அதாவது, ஜூன் 30 வரையிலும் தனக்குக் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருக்கிறது. இதன் பொருள், உச்சநீதிமன்றத்தால் ஸ்டேட் வங்கிக்குக் கொடுக்கப்பட்ட கால அவகாச மான 21 நாட்களுக்குப் பதிலாக, இந்த வேலையை முழுமையாக முடிப்பதற்கு வங்கி தற்போது மேலும் 116 நாட்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறது. இது அனுமதிக்கப்பட்டால், தேர்தல் பத்திரங்கள் தொ டர்பான விவரங்களை மக்களவைத் தேர்தல்கள் முடிந்தபின்னர்தான், புதிய அரசாங்கம் அமைந்த பிறகுதான், பொது மக்களுக்குத் தெரிவிக்கப் படும். பாரத ஸ்டேட் வங்கியின் வேண்டுகோளுக்கு எதிராக கடும் விமர்சனமும் கிண்டலும் கேலியும் எழுந்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி என்னாச்சு?
ஸ்டேட் வங்கியின் அனைத்து செயல்முறைகளும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட்டு விட்டன. பாரத ஸ்டேட் வங்கியால் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் ஒருவ ருக்குக் கொடுக்கப்பட்ட பதிலில், தேர்தல் பத்திரங்கள் சம்பந்தமான பணிகளுக்கான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அமைப்புமுறைக்காக அதன் மொத்த செல வினமான ரூ. 1 கோடியே 50 லட்சத்து 15 ஆயிரத்து 338 ரூபாயில் 60 லட்சத்து 43 ஆயிரத்து 005 ரூபாய் செலவு செய்யப்பட்டிருப் பதாகக் கூறியிருந்தது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்காக 60 லட்சத்திற்கும் அதிகமான ரூபாய் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அமைப்பு முறைக்காக செலவு செய்யப்பட்டிருக்கு மானால், இப்போது மட்டும் எப்படி ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்களின் பதிவுருக்கள் சில தனிப்பட்ட முறையில் (manually) மேற்கொள்ளப்பட்டது என்றும், அவை பாரத ஸ்டேட் வங்கியின் மும்பை தலைமைய கத்திற்கு முத்திரையிடப்பட்ட கவர்களில் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் கூற முடிகிறது?

22, 217 பத்திரங்களை கணக்கிட
21 நாள் போதாதா?
தேர்தல் பத்திரம், ஸ்டேட் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் ஏதேனும் ஒரு நபரால் அல்லது ஒரு நிறுவனத்தால் வாங்கப்படுமானால், அது டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும். தேர்தல் பத்திரத்தை பெற்ற நபர் அதனை வேறொரு ஸ்டேட் வங்கியின் கிளையில் டெபாசிட் செய்தால், அதற்கும்கூட டிஜிட்டல் பதிவு உண்டு. 2019க்கு முன்பே இது தொடர் பாக நிதின் சேத்தி என்பவர் ‘ஹஃப்போஸ்ட் இந்தியா’ (‘HuffPost India’) என்பதில் ஸ்டேட் வங்கியால் அளிக்கப்படும் தேர்தல் பத்திரம் ரகசிய எண்ணைப் பயன்படுத்தி, அதனை யார் வாங்கியது மற்றும் அது யாருக்கு நன்கொடையாகக் கொடுத்தது என்பதை அறிந்துகொள்ள முடியும் என்று எழுதியி ருக்கிறார். தேர்தல் பத்திரங்களில் ஒருசில டிஜிட்டல் முறையி லன்றி கைகளால் (manual) வழங்கப்பட்டிருந்தாலும் கூட, 22,217 தேர்தல் பத்திரங்களைக் கணக்கிடுவதற்கு 21 நாட்களில் செய்ய முடியாது என்பதை நாம் நம்பத்தான் வேண்டும் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஸ்டேட் வங்கி செய்ய வேண்டிய தெல்லாம் இதற்கு கூடுதலாக சில ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது மட்டுமேயாகும்.

ஸ்டேட் வங்கியின் மறைமுக நோக்கம்…
ஆகையால், உச்சநீதிமன்றத்தின் அறிவுக் கூர் மையை அவமதித்திடும் விதத்தில் மிகச் சாதாரண சாக்குப்போக்கு களையும் (lame excuse) போலியான காரணங்களையும் ஸ்டேட் வங்கி கூறியிருக்கிறது என்பது தெள்ளத் தெளி வாகும். உச்சநீதிமன்றம் கெடு விதித்த தேதியான மார்ச் 6க்கு ஒரு நாள் முன்புதான் ஸ்டேட் வங்கி கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதிலிருந்தே அதன் மறைமுக நோக்கம் தெளிவாகவே தெரிகிறது.

மோடி அரசாங்கமும் ஆளும் பாஜகவும் இதுவரை வெளியிடப்பட்ட மற்றும் மீட்டெடுக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிடுவதை முடக்க முயற்சிப்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. ஏனெனில் இந்தத் திட்டமே தங்களால் உதவி பெறுபவர்கள் தங்களுக்கு கைமாறு செய்வதற்கு வசதி செய்து கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் என்று உச்சநீதிமன்றமே சுட்டிக் காட்டி இருக்கிறது. ஒரு கட்டத்தில், பாஜக 6,565 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பெற்றிருப்பது வெளிச்சத்திற்கு வந்தபோது, எந்தத் தனி நபர் அல்லது எந்த நிறுவனம் அவ்வளவு பெரிய தொகை அளித்தது என்ற கேள்வியும் அதற்கு கைமாறாக பாஜக அரசாங்கம் என்ன கொடுத்தது என்ற கேள்வியும் எழுந்தன.

பாஜக-வினால் பெறப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்கள் வெளியிடப்படுவது மற்றொரு கோணத் திலும் முக்கியத்துவம் பெறக்கூடியதாக மாறுகிறது. அதாவது, நியூஸ்லாண்ட்ரி மற்றும் தி நியூஸ் மினிட் (Newslaundry and The News Minute) என்னும் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வு, (தேர்தல் பத்திரங்கள் அல்லாமல் மற்ற வடிவங்களில்) குறைந்த பட்சம் 30 கம்பெனிகள் கடந்த அய்ந்து நிதியாண்டுகளில் தங்கள் நிறுவனங்கள் மீது ஒன்றிய புலனாய்வு முகமைகள் மேற்கொண்ட நடவடிக்கை களிலிருந்து தப்பிப்பதற்காக, பாஜக-விற்கு சுமார் 335 கோடி ரூபாய் நன்கொடை அளித்தி ருக்கின்றன என்று காட்டுகிறது.

நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கவே நன்கொடை
இவற்றில் 23 கம்பெனிகள் 2014க்கும் தங்களுடைய நிறுவனங்கள் அமலாக்கத் துறை அல்லது தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற ஒன்றிய புலனாய்வு முகமைகளால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள் ளப்படாத காலத்திற்கும் இடையே பாஜக-விற்கு எந்த வித நன்கொடையும் அளித்தது கிடையாது. ஒன்றிய புலனாய்வு முகமைகள் தங்கள் கம்பெனிகளுக்கு வந்த பின்னர்தான் இவற்றில் நான்கு கம்பெனிகள் 9.05 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருக்கின்றன. தங்கள் நிறுவனங்கள் மீது ஒன்றிய புலனாய்வு முகமைகள் சோதனைகள் மேற் கொண்ட பின்னர், ஆறு நிறு வனங்கள் அடுத்து வந்த சில மாதங்களில் பாஜக-விற்கு நன்கொடைகளை மிகப்பெரிய அளவில் வாரி வழங்கி இருக்கின்றன.

மிரட்டிப் பணம் வசூல்...
பாஜக-விற்காக ஒன்றிய புலனாய்வு முகமைகள் எப்படியெல்லாம் மிரட்டி பணம் வசூலித்திடப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதற்கு இவை யெல்லாம் மிகச்சிறந்த ஆதாரங்களாகும். பாஜக சம்பந்தப்பட்ட தேர்தல் பத்திரங் களின் விவரங்கள் வெளியிடப்படுமானால், தங்களுக்கு உதவி செய்த பாஜக-விற்கு கைமாறாக எந்த அளவிற்குத் தொகை லஞ்சமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதிப் படுத்தப்பட்டுவிடும் என்பது மட்டுமல்ல, ஒன்றிய புலனாய்வு முகமைகளால் எப்படியெல்லாம் நிறுவனங் களை மிரட்டி, பணம் பறிக்கப்பட்டிருக்கின்றன என் பதும் வெட்ட வெளிச்சமாகிவிடும்.
உச்சநீதிமன்றம், மார்ச் 6 வரையிலும் பாரத ஸ்டேட் வங்கியின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. இவர்களின் சூழ்ச்சித் தந்திரங்களை உச்ச நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. ஸ்டேட் வங்கியின் அவகாசம் கேட்கும் மனுவுக்குக் குறுகிய கால அவகா சமே அளித்திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி
நன்றி: ‘தீக்கதிர்’, 9.3.2024

No comments:

Post a Comment