சென்னை,மார்ச் 9- திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி அறிவித்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு முதலமைச் சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் கூட்டணிக் கட்சி களின் வெற்றிக்கு பாடுபடுவதாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலக்குழு பொதுச் செயலாளர் எஸ்.கர்ணன் மற்றும் தேசிய செயலாளர்கள் எஸ்.சுரேஷ் மற்றும் மாநில நிர்வாகிகள், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை நேற்று (8.3.2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை உடனிருந்தார்.
Saturday, March 9, 2024
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment