கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விட, தற்போதைய பா.ஜ. ஆட்சியில் ஜிஎஸ்டி, பெட் ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை, சுங்கக்கட்டணம் உயர்வு காரணங்களால் ஒவ்வொரு பொருளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
ஆடம்பரப் பொருட்கள் மட்டு மின்றி, மக்களின் அடிப்படை தேவைக்கான பொருட்களின் விலையையும் பா.ஜ. ஆட்சிக்காலம் எக்குத்தப்பாக எகிற செய்துவிட் டது.
பொதுவாக அன்றாடம் பாடு பட்டு உழைக்கிற ஏழைத் தொழி லாளர்களின் பசி போக்கும் உண வாக பெருமைக்குரிய டீ இருக் கிறது.
சிலரது முழு நேர உணவே டீ என்ற நிலை உள்ளது. ஆனால் ஒரு சாதாரண டீ தயாரிப்பிற்கான பொருட்களே கடந்த காங்கிரஸ் காலத்தை விடவும், பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் விலைவாசியில் ஒன்றுக்கு பன்மடங்கு எகிறி நிற்கிறது.
இதனை உணர்த்தும் வகையில், ‘தம்பி, ஒரு டீ..!!!’ என்ற தலைப்பில் ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு டீக்கு உரிய பொருட் களின் விலைவாசியும், பா.ஜ. கட்சி யின் மோடி ஆட்சிக் காலத்தில் அதே ஒரு டீக்கு உரிய பொருட் களின் விலைவாசியும் கொண்ட ஒரு ஒப்பீட்டினை ஆவி பறக்கும் டீ கிளாசை நடுவில் வைத்து வெளியிட்டுள்ள ஒரு ஸ்ட்ரிப் போஸ்டர் அனைவரையும் ஈர்த்துள்ளது.
அந்த போஸ்டரில், ‘காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பால் ரூ.34, பா.ஜ.க. ஆட்சியிலோ ரூ.58.71. தேயிலை ஒரு கிலோ ரூ.143.77லி ருந்து ரூ.282.33க்கும், ஒரு கிலோ சர்க்கரை ரூ.30லிருந்து ரூ.44.41க்கும், சமையல் எரிவாயு ரூ.413.96லிருந்து ரூ.903க்கும் அதிகரித்துள்ளது.
இதேபோல் டீக்குரிய இஞ்சி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிலோ ரூ.63.33க்குள் இருந்தது, பாஜ ஆட்சி காலத்தில் ரூ.240க்கும், ஒரு கிலோ ஏலக்காய் ரூ.557இல் இருந்து 1,113க்கும் உயர்ந்து உள் ளது என்று கூறப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘ஒரு டீ என்பது நம் நாட்டின் உழைப்பாளிகளான அடி மட்ட பாட்டாளிகளின் உணவாக இருக்கிறது. சாதாரண ஒரு டீக்கு உரிய பொருட்களுக்கே பா.ஜ.க. ஆட்சியில் இப்படி ஒன்றுக்கு பன்மடங்கு விலையேற்றம் கண் டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் வைர லாகி வரும் இந்த உண்மை நிலை, ஒவ்வொரு வாக்காளரிடமும் நிச்சயம் அதிர்வை ஏற்படுத்தும். பா.ஜ.க. ஆட்சியில் ஒரு டீ குடிக்க வேண்டுமென்றாலும் பணக்காரராக இருக்க வேண்டும். பா.ஜ.க. ஆட்சி ஏழைகளின் வயிற்றில் அடித்து உள்ளது’’ என்றனர்.
No comments:
Post a Comment