பக்தி மூடநம்பிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 10, 2024

பக்தி மூடநம்பிக்கை!

சாட்டையால் பெண்களுக்கு அடி! தலையில் தேங்காய் உடைப்பு!!
அரசு இதை அனுமதிக்கிறதா?

தேனி, மார்ச் 10 – கோவில் திருவிழாவில் பூசாரியிடம் சாட் டையில் பெண்கள் அடிவாங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது.
தேனி மாவட்டம் கதிர்தர சிங்கபுரத்தில் மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிவில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத மகா சிவராத்திரி அன்று திருவிழா நடைபெறுமாம். அப்போது கோவில் பூசாரியிடம் சாட்டை யால் பெண்கள் சவுக்கடி வாங்கும் வினோத வழிபாடு நடைபெறுவது வழக்கமாம்.அதன்படி இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி விழா 8.3.2024 அன்று நடைபெற்றது. நள்ளிரவு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர். பின்னர் பூசாரியிடம் பெண்கள் சாட்டையால் வாங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராள மான பெண்கள் பயபக்தியுடன் கலந்துகொண்டு,சாட்டையடி வாங்கி வழிபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வலையப்பட்டியில் உள்ள மகா லட்சுமி அம்மன் கோவிலில் சிவராத்திர விழா நடந்தது. இதில் நேற்று (9-3-2024) காலை ஊர் எல் லையில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவி லுக்கு ஊர்வலமாக வந்தனர். அதன்பிறகு பக்தர்கள் தலை யில் தேங்காய்களை உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலையில், பரம்பரையாளர்களுக்கு தலை யில் தேங்காய் உடைக்கப்பட்டது. அதன்பிறகு மாலையில், பக் தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. இதேபோல் கோவிலில் மற்றொரு வினோத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாட்டையால் அடிவாங்கினால் பேய், பிசாசு பிடித்திருந்தால் ஓடி விடுமாம். அதன்படி பூசாரியிடம் பெண் பக்தர்கள், சாட்டையால் அடி வாங்கினர்.

No comments:

Post a Comment