கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மகளிர் நாள் கொண்டாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 14, 2024

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மகளிர் நாள் கொண்டாட்டம்

featured image

கந்தர்வகோட்டை, மார்ச் 14- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் க.கெண்டையன் பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பன்னாட்டு மக ளிர் நாள் கடைப்பிடிக்கப் பட்டது.
இந்நிகழ்விற்கு வட் டாரச் செயலாளர் ரகம துல்லா தலைமை வகித் தார். தமிழ்நாடு அறிவி யல் இயக்க புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் வீரமுத்து, ஒன்றியக் குழு உறுப்பினர் திருப்பதி, ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா செந்தில் ஆகி யோர் முன்னிலை வகித் தனர்.
துளிர் திறனறிவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வி துறையின் புதுக்கோட்டை மாவட்ட உதவித் திட்ட அலுவலர் (தொடக்க கல்வி) கோவிந்தன் சிறப் புரை ஆற்றி மகளிர் நாள் வரலாறு குறித்து பேசும் போது, “1975இல் அய்க் கிய நாடுகள் சபையால் மார்ச் 8 பன்னாட்டு மக ளிர் நாளாக அறிவிக்கப் பட்டது. இருப்பினும், இது முதன்முதலில் மார்ச் 19, 1911 அன்று அமெரிக்கா விலும், பல அய்ரோப்பிய நாடுகளிலும் கொண்டா டப்பட்டது.

மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டா டப்படும் பன்னாட்டு மகளிர் நாள், பெண்களின் சாதனைகள், போராட் டங்கள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான அவர்களின் உரிமையை நினைவுகூரும் அதே வேளையில், கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூகத் தின் பல்வேறு துறைகளில் அவர்கள் ஆற்றிய பங்க ளிப்பையும் சிறப்பித்துக் காட்டுகிறது.பெண்கள் அனைவரும் படிக்க வேண் டும் என்று பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் முத்துக்குமார், இல்லம் தேடிக் கல்வி மய்ய புதுக் கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலையரசன், தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர் வகோட்டை வட்டார துணைத் தலைவர் சின் னராஜா உள்ளிட்டோர் கலந்து வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவ, மாணவிகளின் செயல் பாடுகள் கவிதை, பேச்சு, நடனம், உள்ளிட்டோர் கலைநிகழ்ச்சிகள் செய்து காண்பித்தனர். மகளிர் நாள் நிகழ்வுகளை தன லட்சுமி, உஷா, மகாலட் சுமி, மாதவி, சவும்யா, திவ்யா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தார்கள். ஊர் பொதுமக்கள் சரவ ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக அறிவியல் இயக்க உறுப்பினர் மகா லட்சுமி அவர்கள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment