ஆளுநர் – வேந்தர் அவர்கள், அனைத்து மாநில பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டத்தை கூட்டி, முதல்முறை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குரிமை செலுத்துவதை உறுதிப் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். முதல்முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அடுத்த 10 நாட்களுக்குள் அவர் களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைப் பதை எளிமைப்படுத்தவும், இந்த முயற்சியில் என்சிசி மற்றும் என்எஸ்எஸ் தன்னார்வலர்களை பயன்படுத் தவும், வாக்களித்தவர்களுக்கு இணையவழி சான் றிதழ் கிடைப்பதற்கான செயலியை உருவாக்கவும் இதை ஒரு இயக்கம் போல செயல்படுத்தவும் துணை வேந்தர்கள் ஒப்புக் கொண்டனர். 100% வாக்குப் பதிவை உறுதிப்படுத்திய துறைகள் மற்றும் கல்லூரி களுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடத்தப்படும். அதிக சதவீத வாக்குகளைப் பெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் பாராட்டப்படுவார்கள்.
பிஜேபிக்கு ஓட்டு போடுங்கன்னு இன்னும் ஸ்பீக்கர் கட்டி மட்டும் தான் ஆளுநர் மாளிகை பிரச்சாரம் செய்யவில்லை. தேர்தல் ஆணையம் பல நூறு கோடி ரூபாயை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக செலவு செய்கிறது. அப்படி இருக்க, இதென்ன தனி செலவு? மாணவர்களை பாஜகவிற்கு வாக்களிக்க மூளைச்சலவை செய்யும் திட்டம் தானா ஆளுநரின் செயல்பாடு?
No comments:
Post a Comment