பாட்னா, மார்ச் 20- பாஜக கூட் டணி ஆளும் பீகாரில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு 15.3.2024 அன்று நடை பெற்றது. தேர்வு நடைபெறும் முன்னரே ஹசாரி பாக் பகுதியில் இருக்கும் உணவகம் ஒன்றில் ஆசிரியர் தேர்வுக்கான வினாத்தாள் கிடைப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத் ததையடுத்து, உணவகத்தில் காவல் துறையினர் சோதனை நடத்தியுள் ளனர்.
இந்த சோதனையில் ஆசிரியர் தேர் வுக்கான வினாத்தாளை வைத்து தேர் வுக்கு படித்துக் கொண்டிருந்த மற்றும் ஆசிரியர் தேர்வு அறைக்கு செல்ல இருந்தவர்கள் என 200 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆசிரியர் தேர்வுக்கான வினாத் தாளும், கசிந்த தாகக் கூறப்படும் வினாத்தாளும் ஒரே மாதிரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்யப் படுகிறது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக 200 பேரை சந்தேகத் தின் அடிப்படையிலேயே கைது செய்துள்ளோம் என்றும் பீகார் அரசு மழுப்பலாக பதிலளித்துள் ளது.
பாஜக கூட்டணி அமைந்த உடன் வினாத்தாள் கசிவு காங்கி ரஸ் ராஷ்ட்ரிய ஜனதாதளம் அய்க் கிய ஜனதாதளம் – இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் இணைந்து “மகா கூட்டணி” என்ற பெயரில் கூட் டணி ஆட்சி நடைபெற்று வந்தது.
முதலமைச்சராக நிதிஷ் குமார் இருந்தார். இந்நிலையில், ஜனவரி மாத இறுதியில் பாஜகவின் மிரட் டலால் மகா கூட்டணியில் இருந்து ஓட்டம் பிடித்த நிதிஷ் குமார் பாஜக உடன் கைகோர்த்து மீண் டும் முதலமைச்சரானார்.
பீகாரில் “மகா கூட்டணி” ஆட்சி செய்த பொழுது மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள், அரசுப் பணி தொடர்பான தேர்வுகளை சிறப்பாக நடத்தி அப் போது துணை முதலமைச்சராக இருந்த ராஷ்ட்ரிய ஜனதாதள தலை வருமான தேஜஸ்வி மாநில நிர்வா கத்தை நல்ல நிலையில் வைத்து இருந் தார்.
ஆனால், தற்போது நிதிஷ் குமாரின் சுயநல அரசியலால் பாஜக கூட்டணி ஆட்சி நடை பெற்று வரும் நிலையில், 2 மாதங்களிலேயே ஆசிரியர் பணிக் கான தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்பட் டுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் வினாத்தாள் கசிவு என்பது வழக்க மான நிகழ்வாக உள்ளது. சமீபத் தில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 40 லட்சம் பேர் எழுதிய காவல் துறையினர் தேர்வு வினாத் தாள் கசிவால் ரத்து செய் யப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment